தெரியுமா உங்களுக்கு???

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்
2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.
… 4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.
5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்
6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்
7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.
8.) அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை எவர் மனனமிடுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.
10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.
11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.
12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.
13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.
14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.
16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.
17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.
18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).
19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.
20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் தீரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.
21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இழகு படுத்துகின்றான்.
23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.
24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.
25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.
26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.
27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.
28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.
29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.
30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு

Posted in தவறாமல் பழகுங்கள் | Leave a comment

நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை!

“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹுமத்துல்லாஹி வ பராக்கத்துஹு”அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!

நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூசன் வகுப்புகள், பின்னர் ஓரிரு மணி நேரம் விளையாட்டு என்று அவனுடைய இளம்பருவத்தின் வயது கழிகின்றது. ஓரளவு மார்க்கப்பற்றுள்ள சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் காலையிலோ அல்லது பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வந்த பின்னர் மாலையிலோ அல்-குர்ஆனை (பொருளறியாமல்) ஓதுவதற்கும் இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை பயில்வதற்கும் அனுப்புகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை செய்வதில்லை!

முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற ஒரு சில கல்விக்கூடங்களிலே உலகக் கல்வியுடன் சேர்த்து இஸ்லாத்தின் அடிப்படைகள் சிலவற்றையும் சேர்த்து கற்றுத் தருகின்றனர். இவ்வாறு மார்க்கத்தின் அடிப்படையை சிறுபிராயத்திலேயே கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் மிக மிக அரிதானதாகவே இருக்கின்றது. ஏன் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலே கூட மேலை நாட்டின் நாகரீகத்தைப் பின்பற்றி அந்நிறுவனங்களிலே படிக்கின்ற குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின் பெற்றோர் தனிப்பட்ட முறையில் அக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தாலே தவிர, அந்தப் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவு என்பதே இல்லாமல் போகின்றது.

இதைவிட வேதனை என்னவென்றால், சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் நடத்தப்படுகின்ற ‘முஸ்லிம் சிறுபாண்மையின’ பள்ளிக் கூடங்களிலே வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுவதற்கு கூட வாய்ப்புத் தராமல் பள்ளி நேரங்களை அமைத்திருக்கின்றார்கள். மதிய உணவுக்காக விடப்படுகின்ற சொற்ப இடைவெளி நேரத்தில் மதிய உணவருந்தினால் ஜூம்ஆவுக்குச் செல்ல இயலாது; ஜூம்ஆவுக்குச் சென்றால் மதிய உணவருந்த முடியாமல் பட்டினியாக இருக்க வேண்டியது தான்!

ஜூம்ஆவிற்கே இந்த நிலை என்றால் மற்ற நேரத் தொழுகைகளைப் பற்றி பேசவே தேவையில்லை!

இந்தச் சூழ்நிலையில் மார்க்க அறிவு அறவேயில்லாத அல்லது போதிய மார்க்க அறிவில்லாமல் வளர்க்கப்படுகின்ற அந்த சிறுவன் வாலிப பருமடைந்து கல்லூரிக்குச் சென்றால் அவன் சேருகின்ற கல்லூரியைப் பொறுத்து அவன் சிறுபிராயத்தில் நடைபெற்ற அதே நிகழ்வு ஏற்படுகின்றது.

சிறுபாண்மையினரால் நடத்தப்படுகின்ற ஒருசில கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்கள் தொழுவதற்காக பள்ளிவாயில்கள் போன்றவை கட்டித் தரப்பட்டிருந்தாலும் கல்வித் தரம், கல்வி நிறுவனத்தின் மதிப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நம் பெரும்பாண்மையான முஸ்லிம் மாணவர்கள் விரும்புவது என்னவோ மாற்று மதத்தவர்களால் நடத்தப்படும் இஸ்லாமிய சூழல்களில்லாத கல்வி நிறுவனங்களைத் தான்! எனவே இங்கேயும் அந்த மாணவர்களால் இஸ்லாத்தைப் பற்றி பயில்வதற்கு வாய்ப்பு குறைந்து விடுகின்றது.

அவர்கள் படிப்பை முடித்தவுடன் மூஸ்லிமாக பிறந்த ஒரே காரணத்திற்காக அவர்களுக்குத் தகுந்த வேலை கிடைப்பது என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. அப்படியே ஒருவழியாக வேலை கிடைத்துவிட்டால் அந்த வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக அரும்பாடுபட்டு உழைத்து தம் மேலதிகாரிகளை திருப்திபடுத்த வேண்டியதிருக்கின்றது.

இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து ஒருவழியாக நல்ல வேலையில் செட்டில் ஆனவுடன் திருமணம்! பிறகு சந்தோசமான குடும்ப வாழ்க்கை, குழந்தைகள்; பிறகு அக்குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி என்று ஹாஸ்பிடல் அலைச்சல்; பிறகு அக்குழந்தைகளை பள்ளிக்கூடம் சேர்த்து நம்மைப் போலவே அக்குழந்தைகளையும் நல்லமுறையில் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும்!

அண்டை வீட்டார்களெல்லாம் புதிய சொகுசு வீடு கட்டி வசதியாக வாழ்வது போல் நாமும் புதிய பங்களா கட்டி நல்ல முறையில் வாழ வேண்டும். இதற்காக இரவு, பகல் பாராமல், நேரம் காலம் பார்க்காமல் பகுதி நேர ஊழியம் கூட பார்த்து பொருள் ஈட்ட வேண்டும்! அதற்கு நம் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் பரவாயில்லை! ரிடையர்ட் ஆனவுடன் அமைதியான முறையில் வாழவேண்டும்!

இவ்வாறாக ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்க்கை அலுவலகம், வீடு, மனைவி மக்களை கவனிப்பது என்று நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. அலுவலக நேரம் போக மீதமுள்ள நேரங்கள் டீ.வி, நியூஸ், இமெயில், இன்டர்நெட் பிரவுசிங் ஆகியவற்றுக்கே போதவில்லை!

குழந்தைகள் பருவ வயதையடைந்து பள்ளிப்பருவத்தின் இறுதியை அடைந்துவிட்டால் அவர்களை நல்ல பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரி அல்லது பயன்தரும் படிப்பைத் தருகின்ற பிற நல்லக் கல்லூரிகளில் சேர்ப்பதற்காக அவர்களின் படிப்பின் மீது நமது நேரங்களைச் செலவிட்டு அவர்கள் நன்றாக படிக்கின்றார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பின்னர் அவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அதிகமாக கேபிடேசன் ஃபீஸ் கட்ட வேண்டும்; அதற்காக கடினமாக உழைத்து அதிக பொருளீட்ட வேண்டும்.

ஒருவழியாக அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலையில் அமர்ந்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்வித்து அழகுபார்க்க வேண்டும். பிறகு பேரக்குழந்தைகள், அவர்களோடு கொஞ்சுவது, அகமகிழ்வது அப்பப்பா! வாழ்க்கையிலே நேரமே போதவில்லை!!

நீங்களும் இந்த சராசரி முஸ்லிமின் வட்த்திலிலுள்ளவரா! அப்படியாயின் இந்தக் கட்டுரை உங்களுக்களுக்காகத் தான். தொடர்ந்து வாசியுங்கள்!

இந்த சராசரி முஸ்லிமிடம் போய் தொழுகை, மார்க்க கல்வியைக் கற்பது பற்றிப் பேசினால் அவர்களின் உடனடி பதில் ‘நேரமில்லை’ என்பது நாம் சொல்லித் தான் தெரிய வேண்டு மென்பதில்லை!

அன்பு சகோதர, சகோதரிகளே!

நாம் ஒரு பேருண்மையை மறந்து விட்டோம்! ஆம் சகோதர, சகோதரிகளே! அது தான் இறைவன் நம்மைப் படைத்ததன் நோக்கம்! இறைவன் நம்மை எதற்காகப் படைத்தான்? எதற்காக இப்பூமியில் வசிக்கின்றோம்? வேலை செய்வது, சாப்பிடுவது, குடும்ப வாழ்வில் ஈடுபடுவது, பிள்ளைக் குட்டிகளுடன் மகிழ்வாக இருப்பது, செல்வம் சேர்ப்பது, காலமெல்லாம் உழைத்து சிறுக, சிறுக பொருள் சேர்த்து வீடு கட்டுவது இதுதான் இறைவன் நம்மைப் படைத்ததன் நோக்கமா? இல்லை சகோதர, சகோதரிகளே! நாம் படைக்கப்பட்டதன் உண்ணத நோக்கம் இதுவல்ல!

மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை!

அல்லாஹ் கூறுகின்றான்:

“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்குர்ஆன் 51:56)

இங்கு நம்மில் சிலருக்கு ஒரு ஐயம் ஏற்படலாம்! மனிதப் படைப்பின் நோக்கம் இறைவனை வழிபடுவது மட்டுமென்றிருந்தால் நாம் எவ்வாறு உண்பது, உறங்குவது, குடும்ப வாழ்வில் ஈடுபடுவது போன்ற செயல்களைச் செய்ய இயலும் என்ற சந்தேகம் எழலாம்!

இதுவும் இஸ்லாத்தைப் பற்றிய போதிய தெளிவின்மையால் ஏற்படுவதாகும். “இபாதத் – வணக்கம்” என்பது விரிந்த பொருடைய பதமாகும். சுருங்க கூறுவதென்றால், ‘அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் கட்டளையிட்ட ஏவல்-விலக்கல்களை ஒருவர் முறையாகப் பேணி நடந்தால்’ அதுவே இபாதத்-வணக்கம்’ ஆகும். மற்றொரு வகையில் கூறுவதென்றால் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை இஸ்லாம் காட்டித் தந்த நெறிமுறையில் அமைத்துக் கொள்வாரேயானால் அதுவே வணக்கமாகும்.

அடுத்தது தொழுகை! நாம் திருமறையை எடுத்துப் படித்தோமென்றால் அதில் பல இடங்களில் தொழுகையைப் பற்றியும் ஜக்காத் பற்றியும் இறைவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருப்பதைக் காணலாம். அந்த அளவிற்கு தொழுகை இஸ்லாத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

ஒரு முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் உள்ள வித்தியாசமே தொழுகை தான் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்.

முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)

“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)

இனி தொழுகையை விடுபவர்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கையைப் பார்ப்போம்!

நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்:

‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)

“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)

“இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.” (அல்-குர்ஆன் 107:4-5)

மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்:

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)

எனவே அலுவலக வேலையின் காரணமாகவோ அல்லது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் காரணமாகவோ “நேரம் கிடைக்கவில்லை! அதனால் தொழவில்லை” என்ற கூற்று அடிப்படையற்ற இஸ்லாத்திற்கு முரணான வாதமாகும் என்பதையும் மனிதன் படைக்கப்பட்ட முதல் நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத்தான் என்பதையும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

தொழுகைக்கு கூட அனுமதியில்லாத இடங்களில் வேலை செய்வதைப் பற்றியும் நாம் மறுபரிசீலனை செய்து இஸ்லாமிய சூழல் நிறைந்த வேலையில் சேருவதற்கு நம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் நமது பிரதான கடமையாகிய தொழுகையை விட்டுவிடக்கூடாது.

முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையில் உள்ள வித்தியாசமே தொழுகை என்றிருப்பதால் அத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு எங்கு வசதிப்படுமோ அவ்விடத்தை நோக்கி அல்லது தொழுகைக்கு இடையூறு ஏற்படுத்தாத நிறுவனம் எதுவோ அதில் சேர்ந்து நம்முடைய பணியினை அமைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் இறைவனின் இப்பூமியோ விசாலமானது! இறை மறுப்பாளர்களின் சூழலில் நாம் விரும்பி சேர்ந்துக் கொண்டு பிறகு அங்கு இறைவணக்கத்திற்கு நேரம் கிடைக்கவில்லை அல்லது அவர்கள் எங்களை தொழுவதற்கு அனுமதிப்பதில்லை என்பது அறிவுடைய வாதமாகாது! மாறாக நஷ்டத்திற்குள்ளானதுமாகும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது,

‘நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?’ என்று கேட்பார்கள்.

(அதற்கவர்கள்) ‘நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்’ என்று கூறுவார்கள்.

அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?’ என (மலக்குகள்) கேட்பார்கள்;

எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர – ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்” (அல்-குர்ஆன் 4:97-98)

அடுத்ததாக, ‘மனிதப் படைப்பின் நோக்கம் இறைவனை வணங்குவதே’ என்றிருப்பதால் அவன் தன் வாழ்வை இறைவனை வணங்குவதற்காகவே அமைத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். அதாவது அவன் தன்வாழ்வை இஸ்லாமிய வாழ்வு நெறியில் அமைத்துக்கொள்வது!

இஸ்லாமிய வாழ்வு நெறி என்றால் என்ன? எவை எவை அவசியமானவை? எவை எவற்றை அவசியமாக நிறைவேற்ற வேண்டும்? எவை எவற்றை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் தண்டணை உண்டு? எந்தெந்த காரியங்களைச் செய்தால் ஒருவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிடுவான்? எந்தெந்த காரியங்களைச் செய்தால் மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் செல்ல நேரிடும்? (நவூதுபில்லாஹ்), எந்தெந்த காரியங்களைச் செய்தால் நாம் இரவு, பகல் பாராமல் கண்விழித்து கஷ்டப்பட்டுச் செய்த தொழுகை, காலமெல்லாம் உழைத்துச் சேர்த்த செல்வங்களையெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் ஜக்காத் கொடுத்தது, பகலெல்லாம் பட்டினி கிடந்து நோற்ற நோன்புகள் போன்ற அமல்கள் எல்லாம் மறுமையில் பரத்தப்பட்டப் புழுதியைப் போன்று எவ்வித பலன்களும் இல்லாமல் பாழாகிவிடும்? (நவூதுபில்லாஹ்) எந்தெந்த காரியங்களைச் செய்தால் மறுமையில் இறைவனுக்கு உகந்த அவனுடைய நல்லடியார்களின் கூட்டத்தினருடன் சுவர்க்கச் சோலையில் நுழைவோம்? எந்தெந்த காரியங்களைச் செய்தால் நரகத்தின் அடிப்பாதாளத்திற்கு முகம் குப்புறத் தள்ளப்படுவோம்? (நவூதுபில்லாஹ்)

இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்வது எப்படி?

அன்பு சகோதர, சகோதரிகளே!

இவ்வுலக வாழ்க்கையில் சொகுசான வீடு, கார் மற்றும் இன்னபிற வாழ்க்கை வசதிகளுடன் வாழ்கின்ற மற்றவர்களைப் போல நாமும் நமது பிள்ளைகளும் வாழ வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் உண்டு! பொருளாதார வசதிகளைப் பெருக்கிக் கொள்வதையோ அல்லது அதற்கு வழிவகுக்கின்ற இவ்வுலகக் கல்வியைக் கற்பதையோ இஸ்லாம் ஒரு போதும் தடைசெய்யவில்லை! மாறாக இஸ்லாம் கல்வி கற்பதை ஊக்குவிக்கின்றது.

ஒரு முஸ்லிமின் வெற்றி என்பது மறுமையில் சுவர்க்கத்தை அடைவதாகும்! இதுவே மகத்தான வெற்றி! மறுமை வெற்றியை புறந்தள்ளியவர்களாக மறுமைக்குப் பலனளிக்காத இவ்வுலகக் கல்வியை மட்டும் பலவருடங்கள் பயின்று இவ்வுலகில் கோடி கோடியாக சம்பாதித்து இவ்வுலக வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்தால் நிச்சயமாக அது நம்முடைய வெற்றியல்ல! மாறாக அது நம்மை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்தில் ஆழ்த்திவிடும். அல்லாஹ் நம்மைக் பாதுகாப்பானாகவும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“(நபியே!) நீர் கூறுவீராக: ‘இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது” (அல்-குர்ஆன் 4:77)

அழியக்கூடிய இவ்வுலகத்தின் அற்ப சுகங்களை அடைவதற்காக அழிவே இல்லாத மறுமை வாழ்வை புறந்தள்ளியவர்களாக இவ்வுலகக் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து மார்க்கக் கல்வியைப் புறக்கணித்தோமேன்றால் அல்லாஹ்வின் எச்சரிக்கையை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால், அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும். எனவே, எவன் வரம்பை மீறினானோ- இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்” (அல்-குர்ஆன் 79:34-39)

எனவே நாம் இறைவனின் வழிகாட்டுதலின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு மார்க்கக் கல்வியைக் கற்பது அவசியமாகும். இம்மையில் வெற்றிபெற இவ்வுலகக் கல்வி எந்த அளவிற்கு முக்கியமோ அது போல மறுமையில் வெற்றி பெற மார்க்கக் கல்வியை கற்பதும் அவசியமாகும். இதை முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீதும் நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியிருக்கிறார்கள்.

“ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” (திர்மிதி)

எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைககளை பள்ளிக்கு அனுப்பி ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் இவ்வுலகக் கல்வியைப் பயிற்றுவிக்கும் போது குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவழித்து மறுமைக்குப் பலனளிக்கக் கூடிய மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது அவசியமாகும். அடுத்து நம்முடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது எந்தப் பள்ளியில் தரமான கல்வியுடன் மறுமைக்குப் பலன்தரும் மார்க்கக் கல்வியையும் சேர்த்துக் கற்றுத் தருகிறார்கள் என்பதைப் பார்த்து சேர்க்க வேண்டும்.

அடுத்து சமுதாய நலனில் அக்கரை உள்ள நமது சகோதர, சகோதரிகள் முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிகளின் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு குழந்தைகளுக்கு மார்க்கக்கல்வியை போதிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி அவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் உலகக் கல்வியில் சிறந்து விளங்குவதோடு அல்லாமல் மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் மார்க்க கல்வியையும் சேர்த்தே போதிக்கின்ற சிறந்த கல்வி நிறுவனங்களாக மாறுவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும். வசதியுடைய சகோதரர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இதுபோன்ற பள்ளிக்கூடங்கள் பலவற்றை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.

பன்னிரண்டாம் வகுப்பிலிருந்து வெளிவரும் ஒரு மாணவன் பொறியியல், மருத்துவம் போன்ற சிறந்த மேற்கல்விக்கு தகுதியான சிறந்த மாணவனாக வெளிவருவதோடல்லாமல் குர்ஆன், ஹதீதுகள் மற்றும் இறைவன் நமக்கருளிய சட்டத்திட்டங்களின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அதை பிறருக்கு எடுத்துச் சொல்கின்ற அளவிற்கு சிறந்த ஆலிமாகவும் அவன் வெளிவர வேண்டும்.

இது ஒன்றும் முடியாத காரியம் இல்லை! இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக சாத்தியமானதே! If there is a will, there is a way!

இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது போன்ற கல்வி நிறுவனங்கள் பல வெற்றிகரமாக செயல்படுகின்றன. ஏன் இந்தியாவில் கூட டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இது போன்ற கல்வி நிறுவனத்தை துவக்கி தலைசிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கி வருகின்றார். எனவே நாமும் முயற்சித்தால் இன்ஷா அல்லாஹ் நமது வருங்கால சந்ததியினர் சிறந்த மார்க்க அறிவைப் பெற்ற ஆலிம்களாகவும் அதே சமயத்தில் சிறந்த பொறியியல் வல்லுனர்களாகவும், மருத்துவ மேதைகளாகவும் திகழ்வார்கள்.

அடுத்ததாக நாம் நம்முடைய அலுவலக நேரம் போக மீதியுள்ள நேரங்களிலும், அலுவலக விடுமுறை நாட்களிலும் நமது குடும்பத்திற்காக நமது நேரத்தைச் செலவழித்தது போக எஞ்சியுள்ள நேரங்களை சினிமா, டீ.வி. சீரியல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களிலும் தேவையற்ற இன்டர்நெட் சாட்டிங், பிரவுசிங் போன்ற அத்தியாவசியமற்ற செயல்களில் நம்முடைய நேரத்தை வீணடிக்காமல் நமது மறுமை வாழ்விற்குப் பலன் தரக்கூடிய மார்க்க கல்வியை கற்பது, குர்ஆனை பொருளறிந்து ஓதுவதற்கு முயற்சிப்பது, குர்ஆனின் அரபி இலக்கணத்தைப் படிப்பது, பிறருக்கு குர்ஆனை கற்றுக்கொடுப்பது, மாற்றுமதத்தவர்களுக்கு இஸ்லாத்தைக் எடுத்துச் சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும்.

ஏனெனில், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தை மற்றவர்களுக்குப் போதிப்பதை இறைவன் நம்மீது விதித்திருக்கின்றான்.

“காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல் அஸ்ர் 103: 1-3).

இவ்வசனத்தின் மூலம் நஷ்டத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்காக ஒருவருக்கொருவர் உபதேசம் செய்வது அவசியம் என்பதை உணரலாம்.

எனென்றால் நம்முடைய ஒவ்வொரு மணித்துளி நேரத்திற்கும் அதை எந்த முறையில் செலவிட்டோம் என்பதை இறைவனிடம் கணக்குக்கூற கடமைப்பட்டுள்ளோம்.

“வாழ்நாளை எப்படி கழித்தான்? வாலிபத்தை எதில் ஈடுபடுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்து, எவ்வழியில் செலவு செய்தான்? கற்றவைகளில் எதை செயல்படுத்தினான்? என ஐந்து விசயங்கள் பற்றி விசாரிக்கப்படாத வரை மறுமை நாளில் எந்த மனிதனின் பாதமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி); ஆதாரம்: திர்மிதி.

டி.வி, சீரியல், அரட்டை அடிப்பது, வீண் விளையாட்டுகள் மற்றும் பிற பயனற்ற வழிகளில் தமது ஓய்வு நேரத்தைச் செலவழிப்பவர்கள் பின்வரும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை மீறியவர்களாவர்கள் என்பதையும் நாம் இங்கு நினைவூட்டுகின்றோம்.

‘ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி)

அன்பு சகோதர, சகோதரிகளே!

‘நேரம் பொன் போன்றது’ – இது முதுமொழி! இஸ்லாத்தைப் பொறுத்தவரை இது உண்மைதான். ஒரே ஒரு முறை நமக்கு இவ்வுலக வாழ்வில் கிடைத்திருக்கின்ற இந்தப் பொன்னான நேரத்தை இறைவனுக்கு உவப்பான வழியில் நாம் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ் அதற்குரிய மனவலிமையை நமக்குத் தந்து நம் அனைவரையும் அவனது நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.

-முகவை சேக்

Posted in தினம் ஒரு தகவல் | Leave a comment

மறுமை வெற்றி யாருக்கு?

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கின்றது. அதை நோக்கியே அவன் தனது பயணங்களை அமைத்துக் கொள்கின்றான். அதற்க்காக தனது முழு முயற்ச்சியையும் அர்ப்பணிக்கின்றான். அந்த வெற்றியின் ருசியை கூடிய விரைவில் தான் சுவைக்க வேண்டும் எனவும் ஆவல் கொள்கின்றான். அதை முன்னோக்கியே தனது ஒவ்வொரு செயலையும் அமைத்து கொள்வதை நாம் காண்கிறோம்.
 
மற்ற மனிதர்களின் வெற்றி இலக்கிலிருந்து முஸ்லிம்களின் இலக்கு முற்றிலுமாக மாற்றம் பெறுகின்றது. ஒரு முஸ்லிமுக்கு உன்மையான வெற்றியென்பது மறுமையில் அவன் தனது இறைவனுக்கு முன்னால் நீதி விசாரனைக்காக நிறுத்தப்படும் பொழுது கிடைக்கக் கூடிய வெற்றியே. அல்லாஹ் தன்னுடைய திருமறையில் இதை சொல்லிக் காட்டுக்கின்றான்:
 
ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3:185)
 
அந்நாளில் வேதனையிலிருந்து காக்கப்படுவோர்க்கே அவன் அருள் புரிந்தான். அதுவே தெளிவான வெற்றி. (அல்குர்ஆன் 6:16)
 
எவரது எடைகள் கனமாகி விட்டனவோ அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 23:102)
 
ஒவ்வொரு முஸ்லிமுடைய தெளிவான குறிக்கோள் இந்த மறுமை வெற்றியேயாகும். ஏனெனில் இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது கிடையாது. ஆனால் மறுமை வாழ்க்கையோ முடிவில்லா நிரந்தரம். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்ற முடிவு நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதை சுவைத்தே ஆக வேண்டும். உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள்…. நேற்று இருந்தவன் இ ன்று இல்லை….. இன்று வாழக்கூடியவர்கள் அனைவரும் நிச்சயம் ஒரு நாள் மரணித்தே தீருவார்கள்…. அல்லாஹ் ஏற்படுத்திய நியதி இது …. அது நிச்சயம்….
 
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 21:35)
இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். (அல்குர்ஆன் 55:26)
இந்த நிச்சயிக்கப்பட்ட மரணத்திற்க்கு பிறகு ஒரு விசாரணை உண்டு; அதன் முடிவில் ஒரு நிரந்தர நல்வாழ்வோ (சுவர்க்கம்) அல்லது நிரந்தர துர்வாழ்வோ (நரகம்) நிச்சயம் என நம்பும் முஸ்லிம் கட்டாயம் அந்த விசாரணையில் வெற்றி பெறுவதையே உன்மையான வெற்றியாக கருதுவான். அது தான் சத்தியமான உண்மை.
 
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் இந்த நிலையான மறுமை வெற்றி யாருக்கு என பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான். அவற்றில் சிலவற்றை உற்று நோக்குவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
 
ஈமான் கொள்வது
 
நிச்சமயமாக அனைத்து விடயங்களை விடவும் ஒரு மனிதனின் ஈமான் மறுமை வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது…. இது ஒரு முஸ்லிமுடைய அடிப்படை நம்பிக்கைகளில் உள்ளாதாகும்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அல்குர்ஆன் 23:1)
அல்லாஹ் எதையெல்லாம் நம்ப வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளானோ, அவைகளை அப்படியே நம்புவது ஈமானில் உள்ளதாகும்…. அல்லாஹ்வை நம்புதல், வானவர்களை நம்புதல், விதியை நம்புதல், வேதங்களை நம்புதல், நபிமார்களை நம்புதல், இறுதி நாளை நம்புதல் போன்றவை இதில் அடங்கும். ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் வெற்றியாளர்கள் என கூறுகிறான்.
அலிஃப், லாம், மீம். இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர ்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 21:1-5)
கொன்ட ஈமானில் உறுதி
 
எல்லா நிலைகளிலும் ஏற்றுக்கொண்ட ஈமானில் உறுதியாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். உறுதியான நம்பிக்கைக் கொண்டு, அதில் நிலையாக நிற்க கூடியவர்களையே அல்லாஹ் வெற்றியாளர்கள் என கூறுகிறான்.
வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகி றது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (அல்குர்ஆன் 13:17)
ஈமானிய உறுதிக்கு சில உதாரணங்களையும் நம்முடைய படிப்பினைக்காக அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சொல்லி காட்டுகின்றான்.
 
பிர்அவ்னின் மனைவி & மர்யம் (அலை)
 
உலக மூஃமின்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இவ்விரு பெண்களையும் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். இதற்கு அவர்கள் உறுதியான் ஈமான் கொண்டு அதில் நிலையாக நின்றதை அல்லாஹ் காரணமாகக் கூறுகிறான். துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்ட போதும் தமது இறைவனையே சார்ந்தவர்களாக அவர்கள் இருந்தது உறுதிமிக்க ஈமானுக்கு எடுத்துக்காட்டு……
‘என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!’ என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். (அல்குர்ஆன் 66:11)
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 66:12)
 
பிர்அவ்ன் vs ம‌ந்திர‌க்கார‌ர்க‌ள்
 
மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அற்புதத்தை நேரடியாகக் கண்ட பிர்அவ்னுடைய மந்திரக்காரர்கள், உடனடியாக ஈமான் கொள்கின்றனர். ஈமான் கொணட்து மட்டுமல்லாது, கொடியவனான பிர்அவ்ன் அவர்களை வேதனையை கொண்டு எச்சரிக்கும் போதும் கொண்ட ஈமானில் உறுதியாக அல்லாஹ்வையே சார்ந்து நின்றதை அல்லாஹ் பின்வருமாறு சொல்லிக் காட்டுகின்றான்.
உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, ‘மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்’ என்றனர். ‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையான வரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்’ என்று அவன் கூறினான். ‘எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்’ என்று அவர்கள் கூறினார்கள். ‘எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப் பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்’ (என்றும் கூறினர்.) (அல்குர்ஆன் 20:70-73)
ஈமான் கொண்டு சில பொழுதுகளே ஆன போதும் அவர்கள் காட்டிய உறுதி நம் அனைவருக்கும் மிகச்சிறந்த படிப்பினை. 10 வருட முஸ்லிம், 20 வருட முஸ்லிம், பிறந்ததிலிருந்து முஸ்லிம், தலைமுறை தலைமுறையாக முஸ்லிம் என பெருமைபட்டுக் கொள்ளும் நாம், சோதனைகள் ஏற்படும் போது நம்முடைய ஈமானில் உறுதியாக இருக்கின்றோமா என்பதை சிந்திக்க கடைமைப்பட்டுள்ளோம். சிறு சோதனை ஏற்பட்டால் கூட சகிக்காமல் பச்சையான ஷிர்க், பித்அத் என வழிதவறுவோர் எத்தனை பேர்?
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. ‘அல்லாஹ்வின் உதவி எப்போது?’ என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (அல்குர்ஆன் 2:214)
எவ்வளவு தான் துன்பங்களும் சோதனைகளும் வந்தாலும், அவையெல்லாம் நிரந்தரமல்ல…. சகித்துக் கொண்டு ஈமானிய உறுதியோடு இருந்தால் அல்லாஹ்விடமே மகத்தான வெற்றி உள்ளது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
 
நபிமார்களின் சமூகம்:
 
துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட போதும், தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட போதும், நபிமார்களும் அவர் உடனிருந்தவர்களும் அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்திருந்த்து அவர்களின் ஈமானின் வலிமையை பறைசாற்றுகின்றது.
‘அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ (என்றும் கூறினர்.) ‘உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்’ என்ற ு (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். ‘அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமி யில் குடியமர்த்துவோம்’ என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது. (தூதர்கள்) வெற்றி பெற்றனர். பிடிவாதம் பிடித்த ஒவ்வொரு அடக்குமுறையாளனும் இழப்பை அடைந்தான். (அல்குர்ஆன் 14:12-15)
இறைய‌ச்ச‌ம் (த‌ஃக்வா)
 
படைத்த இறைவன் நம்மை எல்லா நிலைகளிலும் கண்கானித்துக் கொண்டிருக்கின்றான் என சிந்திக்கும் மனிதன் தவறுகள் செய்வதிலிருந்தும், தனது இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்தும் தன்னை தற்காத்துக் கொண்டு மறுமை வெற்றியை நோக்கி விரைந்து செல்கிறான்.
 
மறைவான நிலையிலும், வெளிப்படையான நிலையிலும் மனிதன் இறை விருப்பத்திற்க்கு எதிரான காரியங்கள் செய்வதை விட்டும் இந்த தஃக்வா அவனை காக்கின்றது. அதன் மூலம் நிரந்தரமான வெற்றியின் பக்கம் அவனை கூட்டிச் செல்கிறது.
”அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7:128)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப் போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:35)
உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது. உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல் வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 64:15-16)
அல்லாஹ்வுக்கும் ர‌சூலுக்கும் முற்றிலுமாக க‌ட்டுப்ப‌டுவ‌து
 
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதன் மூலமே இறையருள் கிட்டும், சொர்க்கம் கிடைக்கும். இதில் அலட்சியமாக இருந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாவிட்டால் செய்கின்ற நல்லறங்கள் அனைத்தும் பாழாகி விடும்.
அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். (அல்குர்ஆன் 5:56)
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார். (அல்குர்ஆன் 33:70-71)
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விடயத்தில் கட்டளையிட்டுவிட்டால் நம்முடைய சுய விருப்பு வெருப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு முற்றிலுமாக கட்டுப்பட வேண்டும்.
அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24:51-52)
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் தான் முஃமின்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாதவர்கள் காஃபிர்கள். இறைத் தூதரின் விளக்கமும் வஹீ தான். திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் பின்பற்றுவது முஸ்லி­ம்களின் மீது கட்டாயக் கடமை.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 8:46)
இது எந்த அளவிற்கு குர்ஆனில் வலியுறுத்தப்படுகின்றது என்றால், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட மறுத்தல் அது இஸ்லாத்தை விட்டே ஒருவனை வெளியேற்றும் காரணமாக கூறப்படுகின்றது.
(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)
அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும், அதைச் செவியுறாதவனைப் போலவும், தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக! (அல்குர்ஆன் 31:7)
ந‌ன்மையை ஏவுவது…. தீமையை த‌டுப்ப‌து
 
ஒரு சிறந்த சமுதாயமாக (கைர உம்மத்) அல்லாஹ் உருவகப்படுத்துவது நிச்சயம் நன்மையை ஏவி தீமையை தடுக்கக் கூடியவர்களையே.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
நன்மையை ஏவுவது எவ்வளவு முக்கியமோ அதை விட அதிகமான முக்கியத்துவத்தை தீமையை தடுக்க நாம் பயன்படுத்த வேண்டும். நாங்கள் நன்மையை மட்டுமே ஏவுவோம், தீமையை தடுப்பதனால் பகைமை ஏற்படுகிறது, ஒற்றுமை குலைகிறது என சப்பைக் கட்டு கட்டி அதை அலட்சியம் செய்வர் இன்றைய சமுதாயத்தில் பெறுகி விட்டனர். இது நிச்சயம் அல்லாஹ்வுடைய தூதர் காட்டித் தந்த வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமான சிந்தனையாகும்.
 
எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததினால் ஒரு கட்டளையை மட்டும் செயல்படுத்துவோம், ஆனால் அதே நேரத்தில் மற்றொன்றை செய்தால் நாங்கள் தனிமைப் படுத்தப்படுவோம் என சாக்கு போக்கு கூறி தீமைக்கு எதிராக களமிறங்காமல், குரல் கொடுக்காமல், பிரச்சாரம் செய்யாமல் இருப்பது, அந்த தீமைகளில் அல்லாஹ் அவர்களின் பெயர்களையும் சாட்டிவிடுவான் என்பதில் எச்சரிக்கையாக இருக்கட்டும்.
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 3:110)
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர்ஆன் 3:114)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)
”கெட்டதும், நல்லதும் சமமாகாது” என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! (அல்குர்ஆன் 5:100)
இவ்விடத்தில் ஒரு சாரார் செய்யும் தவறையும் சுட்டிக்காட்ட கடைமைப் பட்டுள்ளோம். தீமையை தடுக்கின்றேன் என களத்தில் புகுந்த சிலர், அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத முறைகளை கையாண்டு மேலும் பல தீமைகளை சமுதாயத்தில் புகுத்தி விட்டதை நாம் காண முடியும். அல்லாஹ் தன்னுடைய திருமறையில் “நன்மையை கொண்டு தீமையை தடுக்க கூறுகிறான்”. நிச்சயமாக நன்மையே தீமையை கொல்லும் மிக ப் பெரிய ஆயுதம்.
அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு. (அல்குர்ஆன் 13:22)
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது. (அல்குர்ஆன் 41:34-35)
தீமைகளை தடுத்து நன்மையை ஏவ களமிறங்கினால் நிச்சயம் சோதனைகள் உண்டு. தீமைகளால் நிறைந்து வழியும் இந்த உலகத்தில் அதை தடுக்க நம்முடைய கைகளையோ, நாவையோ, ஏன் உள்ளத்தையோ நாம் ஈடுபடுத்துவதனால் தோல்விகளும், வேதனைகளும், கடும் எதிர்ப்புகளும் துன்பங்களும், சமுதாய துஷ்பிரயோகங்களும் எதிர்பார்க்கக் கூடியதே. ஆனால் மறுமையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு முஸ்லிமுக்கு இந்த தற்காளிக சோதனைகளும் இன்னல்களும் ஒரு பொருட்டே அல்ல….. இறுதி வெற்றி நிச்சயம் பொறுமையாளர்களுக்கே….. இந்த சத்தியத்தை எதிர்ப்பவர்களுடன் உலகத்தின் அத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தாலும், நம்பிக்கையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்…… பொறுப்பேற்றுக் கொள்ள அவன் போதுமானவன்.
(லுக்மான் தன் மகனிடம்..) என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும். (அல்குர்ஆன் 31:17)
வ‌ர‌ம்பு மீறுத‌ல் கூடாது
 
இன்று அற்ப உலக லாபங்களுக்காக சர்வ சாதாரணமாக அல்லாஹ்வின் வரம்புகள் மீறப்படுவதை பார்க்கின்றோம். இவை அனைத்தும் நிச்சயமாக வழிகேடுகளே.
 
அல்லாஹ் தன்னுடைய இந்த மார்க்கத்தை, தீனுல் இஸ்லாத்தை முற்றிலுமாக நிறைவு செய்துவிட்டேன் என பறைசாற்றும் பொழுது, “இல்லை இல்லை” அது முழுமை பெறவில்லை, எங்கள் இமாம்களும் பெரியார்களும் தான் இதை முழுமைப் படுத்துகிறார்கள் என வாதிடும் போக்கு மிகவும் ஆபத்தானதாகும். அப்பட்டமான ஷிர்க்காகும். இது மறுமை விசாரணையில் நிச்சயம் தோல்வியை ஏற்படுத்தி நரகப் படுகுழிக்கு கொண்டு செல்ல போதுமானதாக உள்ளதை நாம் காண முடியும்.
 
உதாரணமாக, அல்லாஹ் வட்டியின் அனைத்து வடிவங்களையும் தடை செய்திருக்க “பேங்க் வட்டி கூடும்” என கூறுவதும், போதையின் பக்கம் நெருங்காதீர்கள் என ஏவியிருக்க “கொஞ்சமாக குடித்தால் தவறில்லை” என கூறுவதும் நிச்சயம் வரம்பு மீறுதலேயாகும். இவை அல்லாஹ் விரும்பாத அவனுடைய வெறுப்புக்குறிய பண்புகளாகும். அல்லாஹ் வரம்புகளை நிர்ணயித்திருக்க அதை மீறுவது அல்லது அதை குறை காணுவது, அல்லாஹ்வுக்கே சொல்லித் தரும் (நவூதுபில்லாஹ்) மாபெரும் பாவமாகும்….. வரம்புகள் ஏற்படுத்தப் பட்டிருப்பது முற்றிலுமாக பின்பற்றப்படுவதற்கே, நிச்சயமாக மீறுவதற்கல்ல…..
 
சிலர் தமக்கு சாதகமான விசயத்தில் வரம்புகளை சரிகண்டு விட்டு, தமக்கு பாதகம் தரும் என கருதும் விடயங்களில் அவற்றை உதாசினப்படுத்துவதை காணுகிறோம். அல்லது அவைகளை அறிந்தும் கண்டும் காணாததுமாக இருப்பதை பார்க்கலாம்… இவையும் நிச்சயம் வழிகேட்டிற்கே இட்டுச் செல்லும் என்பதை கீழ்காணும் அல்லாஹ்வின் வார்த்தைகள் பறைசாற்றுவதை காணலாம்……
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 5:87)
இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 4:13)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 4:14)
எதிரிகளின் எண்ணிக்கை / பலத்தை கண்டு அஞ்சாமைமற்றும் அல்லாஹ்வுடைய உத‌வியில் உறுதியான நம்பிக்கை
 
இந்த சத்திய பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வேளையில் எதிரிகளின் எண்ணிக்கையையும், அவர்களின் பலத்தையும் கொண்டு அச்சுறுத்தப்படுவது இயற்கையே. இது எல்லா நபிமார்களும் அசத்தியவாதிகளிடம் சந்தித்த அச்சுறுத்தல்களே.
 
அடக்குமுறைகள், ஊர் விலக்கல்கள், காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் மூலம் அவர்கள் இந்த சத்திய பிரச்சாரத்தை முடக்கி விடலாம் என கனவு காண்கிறார்கள். ஆனால் இறுதி வெற்றி நிச்சயம் அல்லாஹ்வை சார்ந்திருப்பவர்களுக்கே.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் 9:32)
”ஷுஐபே! உம்மையும், உம்முடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்குத் திரும்ப வேண்டும்” என்று அவரது சமுதாயத்தில் கர்வம் கொண்ட பிரமுகர்கள் கூறினர். (அதற்கு ஷுஐப்) ”நாங்கள் (உங்கள் மார்க் கத்தை) வெறுத்தாலுமா?” என்று கேட்டார். (அல்குர்ஆன் 7:88)
நபி(ஸல்) காலத்தில் அனைத்து எதிரிகளும் ஒன்று திரண்டு அதிகமான படை பலத்துடன் நம்பிக்கையாளர்களை எதிர்த்த போதும் இதே அச்சுறுத்தல் தான் அவர்களுக்கும் விடப்பட்டது…. அதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான், இதை கேட்டவுடன் நம்பிக்கையாளர்கள் தளர்ந்து விடவில்லை மாறாக அவர்களது ஈமான் வலுப்பெற்றது…… அவர்கள் கூறினார்கள் “ஹஸ்பனல்லாஹ் வ நியமல் வகீல்” (எங்களுக்கு பொறுப்பேற்ப்பதறக்கு அல்லாஹ் போதுமானவன்).
“மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ”எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்” என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில ்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றனர். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். தனது நேசர்களை ஷைத்தான் தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! ((அல்குர்ஆன் 3:173-175)
‘உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது’ என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)
இது தான் உறுதியாக இந்த சத்திய பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒவ்வொரு இறை விசுவாசியின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். துன்பங்களும், சோதனைகளும் இந்த சத்திய பிரச்சாரத்தில் பின்னிப் பினைந்தவை. அதன் மூலம் அல்லாஹ் நம்முடைய ஈமானை சோதிக்கின்றான் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும்.
 
அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட அந்த முன்னால் மந்திரவாதிகளை பிர்அவ்ன் அவனது படை பலம் மற்றும் கடுமையான அதிகாரத்தை கொண்டே மிரட்டுகிறான். ஆனாலும் இறுதி வெற்றி அந்த ஈமானிய உள்ளங்களுக்கே. அல்லாஹ் அவர்களையே காப்பாற்றி அவனை மூழ்கடித்தான்.
உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, ‘மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்’ என்றனர். ‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையான வரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்’ என்று அவன் கூறினான். ‘எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்’ என்று அவர்கள் கூறினார்கள். ‘எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப் பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்’ (என்றும் கூறினர்.) (அல்குர்ஆன் 20:70-73)
நீங்கள் உற்று நோக்கினால் அல்லாஹ் ஹக்கையும் (சத்தியம்), பாத்திலையும் (அசத்தியம்) இவ்வாறே வேறுபடுத்திக் காட்டுகிறான் என்பதை காணலாம். சத்தியம் முன்னெடுத்து செல்லப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அனைத்து பாத்தில்களும் ஒன்று சேர்ந்து அதை எதிர்ப்பதை நாம் கண்கூடாக காண முடியும். அல்லாஹ் அந்த பாத்தில்களை ஒன்றுபடுத்தி சத்தியத்தை தெளிவானதாக்கி காட்டுகிறான்.
 
நபி(ஸல்) அவர்கள் மூன்று விதமான எதிரிகளை எதிர் கொண்டார்கள் (இணை வைத்த மக்கத்து முஷ்ரிக்குகள், யஹீதிகள் & நசாராக்கள்). இவர்கள் அனைவரது கொள்கையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக இருந்த போதிலும், முற்றிலும் வேறுபட்டதாக இருந்த போதிலும் அவர்களிடையே நபி(ஸல்) அவர்களுடைய சத்திய பிரச்சாரம் வந்த போது அவர்கள் அனைவரும் ஒன்று பட்டு இதை எதிர்த்ததை நாம் பார்க்கின்றோம்.
 
இன்றைக்கும் இதே நிலை. சத்தியத்தை எப்படியாகினும் எதிர்க்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே கொண்டு அசத்தியங்கள் ஒன்று திரண்டு பலம் போல காட்டி நிற்பதை நாம் காணலாம். ஆனால் உண்மையில் அவர்கள் உள்ளங்கள் நிச்சயமாக சிதறிக் கிடக்கின்றன. (வ குலூபுகும் ஸத்தா)….. சத்தியம் மட்டுமே சிதறாமல் உறுதியாக நிற்கும் வல்லமை படைத்தது.
அரண் அமைக்கப்பட்ட ஊர்களிலிருந்தோ, சுவர்களுக்குப் பின்னாலிருந்தோ தவிர அவர்கள் ஒன்று சேர்ந்து உங்களிடம் போரிட மாட்டார்கள். அவர்களுக்கிடையே பகைமை கடுமையானது. அவர்கள் ஒன்று திரண்டுள்ளதாக நீர் கருதுவீர். அவர்களின் உள்ளங்களோ சிதறிக் கிடக்கின்றன. அவர்கள் விளங்காத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 59:14)
இரண்டு அணியினர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில் உங்களுக்குச் சான்று உள்ளது. ஓர் அணியினர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டனர். (ஏக இறைவனை) மறுப்போராக மற்றொரு அணியினர் இருந்தனர். தம்மைப் போல் இரு மடங்காக கண்களால் அவர்களைக் கண்டனர். தான் நாடியோரைத் தன் உதவியின் மூலம் அல்லாஹ் வலுப்படுத்துகிறான். அறிவுடையோருக்கு இதில் பாடம் உள்ளது. (அல்குர்ஆன் 3:13)
சத்தியத்தில் உள்ளவர்களுக்கும், அசத்தியத்தில் உள்ளவர்களுக்கும் அல்லாஹ் இது போலவே உதாரணம் கூறுகிறான். உறுதியான ஈமான் இல்லாமல் சறுக்கி விடுபவர்கள் நுரைகளை, சருகுகளை, குப்பைகளை போல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றவர்கள் என்றும் உறுதியான ஈமான் கொண்டவர்கள் அடியில் தங்கி விடும் வேர்களை போன்று உறுதியானவர்களாக மக்களுக்கு பயனுள்ளவர்களாக உள்ளவர்கள் என்றும் கூறுகிறான்.
வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகி றது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (அல்குர்ஆன் 13:17)
எவ்வித சோதனைகள், துன்பங்கள் வந்த போதிலும் உறுதி குன்றாமல் நின்று சத்தியத்தை தம் இறுதி மூச்சுவரை கூறுவதே அந்த மாபெரும் வெற்றிக்கு நம்மை உரியவர்களாக ஆக்கிவிடும். அல்லாஹ் இதையே எதிரிகளை பார்த்து கூறுமாறு நபி(ஸல்) அவர்களுக்கு கட்டளை இடுகிறான்.
‘(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரண்டு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் எங்களுக்கு எதிர் பார்க்கிறீர்களா? ஆனால் அல்லாஹ் தனது வேதனை மூலமோ, எங்கள் கைகளாலோ உங்களுக்குத் தண்டனை வழங்குவதையே நாங்கள் உங்களுக்கு எதிர்பார்க்கிறோம். நீங்கள் எதிர்பாருங்கள்! உங்களுடன் நாங்களும் எதிர்பார்க்கிறோம்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 9:52)
பெரும் பாவ‌ங்க‌ளிலிருந்து வில‌கியிருப்பது
.
அல்லாஹ்வும் அவனது தூதரும் எதையெல்லாம் பெரும்பாவங்கள் என பட்டியலிட்டார்களோ அவற்றிலிருந்து முற்றிலுமாக விலகியிருப்பது….. அவற்றை வெருப்பது…. இவை வெற்றியின் அடையாளங்களாகும்.
 
இனைவைப்பு, கொலை, வட்டி போன்ற எல்லா பெரும்பாவங்களிலிருந்து எல்லா நிலையிலும் ஒதுங்கியிருக்க வேண்டும். உதாரணமாக அல்லாஹ் வட்டியை கடுமையான முறையில் சாடி அதை பெரும்பாவம் என சொல்கின்றான். நபி(ஸல்) அவர்களும் வட்டியை ஹராமாக்கி அதனோடு தொடர்புடைய அத்தனையையும் தடுத்துள்ளார்கள். இது போன்ற நிலையில் மறுமை வெற்றியை இலக்க்காக கொண்ட ஒவ்வொரு முஃமினும் இது போன்ற தடுக்கப்பட்ட அனைத்திலிருந்தும் முழுவதுமாக விலகியிருத்தல் வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 3:130)
சிலர் இனைவைப்பு போன்றவற்றை மட்டும் பெரும் பாவமாக கருதிவிட்டு வட்டி போன்றவற்றுடன் சுமூகமாக செல்வதை நாம் காண முடியும். இது நிச்சயம் வழிகேடான சிந்தனை என்பதில் கடுகளவும், கடுகின் முனையளவும் சந்தேகமில்லை.
 
அருவ‌ருப்பான காரிய‌ங்க‌ளிருந்து வில‌கியிருப்ப‌து
 
அல்லாஹ்வுக்கும் அவனது கட்டளைகளுக்கும் மாறு செய்கின்ற அல்லது செய்யத் தூண்டுகின்ற அனைத்து அனாச்சாரங்களிலிருந்தும் விலகியிருத்தல் வேண்டும். குறிப்பாக நபி(ஸல்) நரகத்தை கொண்டு எச்சரிக்கை செய்த “பித்அத்” எனும் அனாச்சாரத்திலிருந்து முழுவதுமாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
 
விபச்சாரம், மது, சூதாட்டம், ஜோசியம், குறி, தாயத்து, தட்டு, தகடு, வாஸ்து, கத்தம், பஞ்சா, மீலாது, போன்ற அல்லாஹ்வின் வெறுப்பிற்குறிய காரியங்களிலிருந்து முற்றிலுமாக தூர விலக வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:90-91)
எல்லாம் அல்லாஹ்வுக்காக என தூய எண்ணம் கொள்வது 
 
அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாக கொண்டு நம் செயல்கள் அமைந்தால் மட்டுமே மறுமையில் வெற்றிக்குரியவர்களாக நாம் மாற முடியும்.
‘எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப் பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்’ என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:162-163)
மாறாக, இவ்வுலகில் போற்றப்பட வேண்டி முகஸ்துதிக்காக நற்செயல்களை செய்தால், அது ரியா எனும் சிறிய இணை வைத்தலில் மூழ்கடித்து நரக நெருப்பில் தள்ளிவிடும்…. இதைப் பற்றி நபி(ஸல்) கூறினார்கள்….
“நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன். (புஹாரி: 6499 அறிவிப்பவர்: ஜூன்துப் (ரலி).
தாஃவா பிரச்சாரமாகட்டும், வணக்க வழிபாடுகளாகட்டும், நம்முடைய ஏனைய அமல்களாகட்டும் இவைகளை நாம் செய்வது அல்லாஹ்விடம் கூலியை பெருவதற்காக மட்டுமே இருக்க வேண்டும். இவ்வுலகிலேயே அனைத்து பலன்களையும் அடைந்து விட வேண்டும் என விரும்புவோரே அது கிடைக்காமல் சோதனை ஏற்படும் போது தளர்ந்து வழிதவறி விடுவதை பார்க்கின்றோம்.
 
நம்முடைய அனைத்து விடயங்களிலும் விருப்பு வெருப்புகளை அல்லாஹ்வுக்காக மட்டுமே என ஆக்கிக்கொள்வது இதில் முதன்மையானதாகும்…
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். (அல்குர்ஆன் 58:22)
பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை
 
அல்லாஹ்வின் பாதையில் தம்முடைய வாழ்க்கையை சீராக்கிக் கொள்ளும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இவ்வுலக சோதனை என்பது நிச்சயம். அதனை மறுமை பயன்களுக்காக சகித்துக் கொள்ளும் சகிப்புத்தன்மையே பக்குவப்பட்ட ஈமானுக்கு உகந்ததாகும். மறுமை வெற்றிக்கும் உரியதாகும்.
நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 3:200)
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. ‘அல்லாஹ்வின் உதவி எப்போது?’ என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (அல்குர்ஆன் 2:214)
‘அவர்கள் சகித்துக் கொண்டதால் இன்று அவர்களுக்கு நான் பரிசளித்தேன். அவர்களே வெற்றி பெற்றோர்’ (என்றும் இறைவன் கூறுவான்.) (அல்குர்ஆன் 23:111)
மனிதர்கள் நல்லவற்றுக்கு அவசரப் படுவது போல் அவர்கள் விஷயத்தில் தீங்கு செய்வதற்கு அல்லாஹ் அவசரப் பட்டிருந்தால் அவர்களின் காலக்கெடு அவர்களுக்கு முடிக்கப்பட்டிருக்கும். நமது சந்திப்பை நம்பாதவர்களை அவர்களது அத்துமீறலில் தடுமாற விட்டு விடுவோம். (அல்குர்ஆன் 10:11)
அட‌க்க‌ம்
 
சத்தியத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும், அதை பிரச்சாரம் செய்பவர்களையும் அல்லாஹ் இவ்வுலகத்தில் சிறுச் சிறு வெற்றிகளை கொண்டும் சோதிப்பான். அது போன்ற வெற்றிகளின் போது “இது என்னுடைய முயற்ச்சியால் விளைந்தது” என இறுமாப்பு கொள்ளாமல் இது என்னுடைய ரப்பின் நாட்டப்படியே ஏற்பட்டது என அடக்கம் மேலிட வேண்டும். பல சகோதரர்கள் இந்த விடயத்தில் அகம்பாவம் கொண்டு மறுமை நன்மையை பாழாக்கி விடுவதை நாம் காண்கிறோம்.
 
நபி(ஸல்) வரலாற்றில் மிக முக்கியமான ஓர் நிகழ்ச்சியான மக்கா வெற்றியின் போது இறக்கியருளப்பட்ட வசனம் இதையே தெளிவாக பறைசாற்றுகிறது.
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 110:1-3)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்
நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும் போது ஸஜ்தாவில் விழுவோரும், தமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள். (அல்குர்ஆன் 32:15)
அல்லாஹ்வின் பாதையில் அறப்போர்
 
அல்லாஹ்வுக்காகவும், அவனது மார்க்கம் மேலோங்க வேண்டுமென்பதற்காகவும் தம்முடைய உடல், பொருளால் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிபவர்களையும் வெற்றியாளர்கள் என அல்லாஹ் பெருமை படுத்துகிறான்.
இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ, வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம். (அல்குர்ஆன் 4:74)
நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத், இஞ்சீல், மற்றும் குர்ஆனில் அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி. அல்லாஹ்வை விட தன் வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:111)
நம்பிக்கை கொண்டோரே! (களத்தில்) ஓர் அணியைச் சந்தித்தால் உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 8:45)
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர், அல்லாஹ்விடம் மகத்தான பதவிக்குரியவர்கள். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 9:20)
யாருக்கு இல்லை இந்த மகத்தான வெற்றி
 
இது வரை அந்த மகத்தான மறுமை வெற்றிக்கு சொந்தக்காரர்கள் யார் என குர்ஆன் கூறுவதை கண்டோம். அதே நேரத்தில் அந்த மகத்தான வெற்றியை இழந்து இழிவுக்குள்ளாக்கப்பட்டு மறுமையில் நஷ்டமடைந்தோரையும் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தோலுரித்து காட்டுகின்றான்.
 
இத்தகைய இழிவுக்குரியவர்கள் எத்தகையோர் என்றால்

இணைவைக்கும் முஷ்ரிக்குகள்
 
ஏக இறைவனாகிய அந்த ரப்புல் ஆலமீனுக்கு இணை துணைகளை கற்பித்து அவனுக்கு நிகராக அவர்களை உயர்த்தும் பாவிகள். அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமான அவனது பண்புகளை மற்ற அவனது படைப்பினங்களுக்கும் உண்டென கருதுவது தெளிவான இணைவைப்பாகும். மறுமையில் இவற்றின் கூலி சுட்டெரிக்கும் நரகமே.
அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 23:117)
அல்லாஹ்வுடன் வேறு கடவுளைக் கற்பனை செய்யாதீர்! (அவ்வாறு செய்தால்) இழிந்தவராகவும், (இறையருளை விட்டும்) தூரமாக்கப்பட்டவராகவும் நரகத்தில் வீசப்படுவீர்! (அல்குர்ஆன் 17:39)
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.
 
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
 
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!
 
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் உங்களுக்கு வழி காட்டியவனா? தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? ‘நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!’ என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 27:60-64)
இறைவனை மறுக்கும் காபிர்கள்
 
அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வை மறுத்து அவனுடைய சந்திப்பை பொய்யென கருதிய காபிர்கள் (நிராகரிப்பாளர்கள்) மறுமையில் தோல்வியை தழுவியர்வகளாக நரகத்தில் வீசப்படுவார்கள். இவர்களே சுட்டெரிக்கும் நரகத்தின் எரிபொருளாகி மறுமையில் இழிநிலையை அடைந்தவர்கள்.
‘(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்’ (என்றும் கூறினோம்.) (அல்குர்ஆன் 2:39)
(நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. (நம்மை) மறுக்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம். (அல்குர்ஆன் 35:36)
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'(என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:3)
இறைவனின் கண்ணியத்தை குறைப்பவர்கள்
 
அந்த ஏக நாயனான அல்லாஹ்வை அவனது தகுதியிற்கு ஏற்றாற்போல் கண்ணியப்படுத்தாதவர்களும் மறுமை நாளின் கடும் வேதனைக்கு உள்ளாவார்கள். இவர்கள் இரு சாரார்கள் 1) படைப்பினங்களை அல்லாஹ்வின் அளவிற்கு உயர்த்தியவர்கள். 2) அல்லாஹ்வின் கண்ணியத்தை அவனது படைப்பினங்களின் அளவிற்கு குறைத்தவர்கள். இருவரும் குற்றவாளிகளே…..
அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். (அல்குர்ஆன் 39:67)
வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற் குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். (அல்குர்ஆன் 4:171)
(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட் களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 6:101)
எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தகுதியானதன்று. அவன் தூயவன். ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவெடுத்தால் ஆகு’ என்று தான் அதற்குக் கூறுவான். உடனே அது ஆகி விடும். (அல்குர்ஆன் 19:35)
சத்தியம் தம்மிடம் வந்தபின் தர்க்கம் புறிந்து அதை ஏற்க மறுப்பவர்கள்.
 
உண்மையான சத்தியம் தம்மிடம் வந்த பின் அதை ஏற்க மறுத்து, அகம்பாவம் கொண்டு தாம் உள்ள அசத்தியிலேயே தொடரும் பாவிகள் நிச்சயம் கடும் வேதனையை சுமந்தவர்களாக மறுமையில் நரகம் புகுவார்கள் என அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும், அதைச் செவியுறாதவனைப் போலவும், தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக! (அல்குர்ஆன் 31:7)
தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு அதைப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? நாம் குற்றவாளிகளைத் தண்டிப்போம். (அல்குர்ஆன் 32:22)
எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவ ருக்கு ஒரு ஷைத்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான். (அல்குர்ஆன் 43:36)
இட்டுக்கட்டிய பாவிகள்
 
அல்லாஹ் கூறாததை அவன் மீது இட்டுக்கட்டி அற்பக்கிரயத்திற்காக இந்த தூய மார்க்கத்தை வியாபாரமாக்கி வயிறு வளர்க்கும் பாவிகள் மறுமை நாளின் கடும் வேதனைக்கு சொந்தக்காரர்கள். அல்லாஹ் சொல்லாததை அவன் மீது இட்டுக்கட்டியதே இதன் காரணம். இவர்களே பாவிகள், குற்றவாளிகள்.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:21)
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? குற்றவாளிகள் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 10:17)
‘அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்’ என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?. ‘அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுவோர் வெற்றி பெற மாட்டார்கள்’ என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 10:68-69)
பிரிவுகளை ஏற்படுத்தியவர்கள்
 
ஒரு இறைவன், ஒரு மார்க்கம் என்றிருக்க இந்த மார்க்கத்தை தம் இஷ்டத்துக்கு கூறு போட்ட பாவிகளும் மறுமை வெற்றியை சுவைக்க மாட்டார்கள். “லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்” என சஹாதா ஏகத்துவ கலிமாவை மொழிந்துவிட்டு பின்னர் பல கூறுகளாக பிரிந்துவிட்ட்தே இவர்களின் நஷ்ட்த்திற்கு காரணம்.
தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:159)
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:105)
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறு வதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். (அல்குர்ஆன் 3:103)
இது போன்ற இழி நிலையிலிருந்து நம் அனைவரையும் அந்த ஏக இறைவன் காத்து அருள் பாலிப்பானாக. அவனது சத்திய மார்க்கத்தில் உறுதியுடன் நிற்கக் கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக. அந்த தூய இரட்சகனுக்கு இணை/துணை கற்பிக்கும் மாபெரும் பாவத்தை விட்டும் பாதுகாப்பானாக.
 
ஈமான் கொண்டு, அதில் உறுதியாக நின்று, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, இறையச்சம் கொண்டு, நல்லறங்கள் செய்யக் கூடிய கூட்டத்தில் நம் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பானாக.
 
எந்நிலையிலும் கொண்ட சத்தியக் கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல் இறுதி மூச்சு வரை முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லீமாகவே மரணிக்கக் கூடிய நற்பாக்கியத்தையும், மறுமையில் பாவங்கள் மன்னிக்கப்பட்டு உயர்ந்த சொர்க்கமாகிய ஜன்னத்துல் பிர்ஃதவ்ஸில் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து வெற்றி பெறச் செய்வானாக. ஆமீன்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்! (அல்குர்ஆன் 3:102)
Posted in தினம் ஒரு தகவல் | Leave a comment

ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல்போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள்.

இன்னும் சில குடும்பங்களில் முஅத்தின்(மோதினார்) இமாம்(அஜ்ரத்)போன்றோரை அழைத்துவந்து மைய்யத்திற்க்கு செய்யவேண்டியதை செய்யுங்கள் என்று சொல்லி விட்டு அந்தகுடும்பத்தில் உள்ளவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். இந்த நிலையைப் போக்கி இதன்உண்மையான நிலைகளை நமது சகோதரர்கள் புரிந்து செயல்பட வேண்டு மென்ற நன்நோக்கில்என்னால் முடிந்த வரை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இதை தொகுத்துள்ளேன்.

அதனால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் குடும்பத்தில் ஏற்ப்படும் மைய்யித்திற்க்காவது நாமேஅதற்க்கு செய்யவேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்று எண்ணி இவைகளை நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும் அல்லாஹ் அதற்க்கு அருள்புரியவேண்டுமென துஆ செய்கிறேன் (ஆமீன்) தயவு செய்து இதில் குறைகள் இருப்பின் சுட்டிகாட்டுங்கன்;  இன்ஷா அல்லாஹ் திருத்தி கொள்கிறேன்

(குல்லு நப்சின் தாயிகதுல் மவ்த்) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அடைந்தேதீரும். (அல்குர்ஆண். 3ஃ185) என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்க ) இந்த உலகில் பிறந்தஅனைவருமே ஒரு நாள் இறப்பவர்கள்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது நமக்கு .முன்னர் வாழ்ந்த அனைவரும் இறந்தது போலவே நாமும் ஒரு நாள் இறப்போம்இ நம்மையும்ஒரு நாள் கப்ரில் வைப்பார்கள் என்பது உண்மை ஆனால் நாம் எங்கு? எப்படி? எப்போது? இறப்போம் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிற மறைவான ஞனத்தில் உள்ளதாகும் .எனவே நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ள இன்பங்களை தகர்த்தொழிக்கக்கூடிய (மரணத்) தைய அதிகமதிகம் நிணைவு கூருங்கள்(திர்மிதி)என்ற சொல்லிற்கிணங்க ங்மரணத்திற்குப் பின்னருள்ள வாழ்க்கைக்காக அல்லாஹ்வும் ரசூலும் ஏவிய நற்செயல்களை அதிகம் கடை பிடித்து அவர்கள்தடுத்துள்ள காரியங்களை தவிர்த்துக் கொள்வது நம் அனைவர்கள் மீதும் கடமைய கடமையாகும். ஆகவே ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டியகடமைகள் பல உள்ளன அவைகள் குறித்து இன்ஷா அல்லாஹ் கானலாம்

1. மைய்யத்தின் கண் திறந்து இருந்தால் அதைக் கசக்கி மூட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் அபூஸலமா(ரலி)அவர்கள் இறந்தபோது அவர்களின் கண்களை கசக்கி மூடி விட்டு கூறினார்கள் உயிர்கைப்பற்றப்படும்போது பார்வை அதை பின்பற்றி (நிலை குத்தி) நின்றுவிடுகிறது என்று கூறினார்கள் (முஸ்லிம்)

2. இறந்த உடனேயே அந்த மைய்யித்து விகாரம் அடையாத அளவுக்கு உடல் சூட்டோடு இருக்கும்போதே கை கால்களை இலகுபடுத்தி சீராக படுக்கவைக்கவேண்டும். அதோடு அந்த மைய்யத்தின் வயிறு ஊதாமல் இருப்பதற்காக சற்று கன கனமான பொருளை வயிற்றில் வைக்க வேண்டும்.

3. மைய்யித்தின் உடல் முழுதும் ஆடையால் மறைக்கவேண்டும். நபி(ஸல்)அவர்கள் இறந்த போது கோடு போட்ட ஒரு ஆடையால் உடல் முழுக்க மூடி மறைக்கப்பட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் அஅறிவித்தார்கள் (ஆதாரம்: புஹாரி முஸ்லிம்)

4. குளிப்பாட்டி ஆடையிட்டு (கபனிட்டு) ஜனாஸ தொழுகை நடத்தி முடித்து அடக்கம் செய்யும் வரை எல்லாவற்றையும் விரைவாகச் செய்ய வேண்டும் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் வேகம் காட்டுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் : புஹாரி,முஸ்லிம்)

5. எந்த ஊரில் அவர் இறந்தாரோ அதே ஊரில் அவரை அடக்கம் செய்ய முயற்ச்சிக்க வேண்டும் உஹது போரில் கொல்லப்பட்ட(ஷஹீதான)சஹா ஹாபாக்களை இடம் மாற்றாமல் அந்த இடத்திலேயே அடக்கம் செய்யுமாறு நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள்  (ஆதாரம்:திர்மிதி. அபூதாவுத், நஸஈ,இப்னு மாஜா)

ஜனாஸாவை குளிப்பாட்டுதல்

ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் தொழுகை நடத்துவது வரை உள் ளவற்றை சிலர்செய்வதன் மூலம் மற்றவர்களின் மீதான கடமை நீங்கிவிடும். இதற்குதான் (ஃபர்ழ் கிஃபாயா) என்றுசொல்லப்படும் எவருமே இந்த கடமைகளை செய்யாதபோது எல்லோருமே குற்றவாளிகளாக தண்டிக்கப் படுவோம் .ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் அடக்கம் செய்வது வரை கலந்து கொண்டவரின் நன்மைபற்றி நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் கூறி இருக்கிறார்கள்.

ஒருவர் தான் இறந்த பின் நீங்கள் தான் என்னை குளிப்பாட்டவேண்டும் என்று (வஸிய்யத்)மரண சாசனம் எழுதி வைத்திருந்தால் அவர்தான் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு அதிகஉரிமை பெற்றவர். அப்படி வஸிய்யத் செய்யாதபட்சத்தில் இறந்தவருக்கு மிக நெருக்கமான உறவுமிக்கவர் உரிமை பெறுவார், ஏனெனில் அவர்கள்த தாம் அதிக அக்கறை கொள்வர். பெண்ணுக்கும் வஸிய்யத் விஷயத்தில் ஆணைப் போன்றே.

கணவன் தன் மனைவியையும் மனைவி தன் கணவனையும் குளிப்பாட்டலாம் . நபி(ஸல்)அவர்கள் தமது மனைவி ஆயிஷா(ரலி)அவர்களிடத்தில் கவலைப் படாதீர்கள் எனக்கு முன்னால் நீங்கள் இறந்து விட்டால் நானே உங்களை குளிப்பாட்டுவேன் என்று கூறினார்கள்(ஆதாரம் :அஹ்மத்)

அபூபக்கர்(ரலி) அவர்கள் நான் இறந்த பின் எனது மனைவிதான் பின் என்னை குளிப்பாட்டவேண்டும்என்று வஸிய்யத் செய்து இருந்தார்கள்.(ஆதாரம் : முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்)

ஏழு வயதிற்க்குட்பட்ட ஆண் அல்லது பெண் பிள்ளைகளில் யார் இறந்தாலும் அவர்களைதாய் அல்லது தந்தை குளிப்பாட்டலாம்.

:ஆண் கள் மட்டுமே உள்ள இடத்தில் பெண் இறந்து விட்டாலோ அல்லது பெண்கள் மட்டுமேஉள்ள இடத்தில் ஆண் இறந்துவிட்டாலோ குளிப்பாட்டாமல் தயமம் அதாவது ஒருவர் தன் இரண்டுகை களையும் பூமியில் அடித்து அவ்விரு கைகளையும் அந்த ஜனாஸாவின் முகம் கைகளில் தடவவேண்டும்
:காபிர் இறந்துவிட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அவரை குளிப்பாட்டுவதோ அடக்கம் செய்வதோ கூடாது இதுப்பற்றி அல்லாஹ்வே கூறுகிறான் அவர்களில் யாராவது இறந்துவிட்டால்அவருக்காக நீர் ஒருக்க காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம் இன்னும் அவர்களின் (கப்ரில்)அடக்கஸ்தலத்தில் அவருக்கு( பிரார்த்திப்பதற்க்காக) நிற்கவேண்டாம் (அல்குர்ஆண்.9 984) என்று றுகூறுகிறான் தொழ வைப்பதே கூடாது என்று சொல்லும்போது மற்றதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை

மைய்யித்தை குளிப்பாட்டும் போது அதன் மருமப்பகுதிகள் யார் கண்களிலும் படாத வாறு மறைத்த நிலையிலேயே அதன் ஆடைகளை களைய வேண்டும். பிறகு மைய்யித்தை சற்று உயர்த்தி உட்கா கார வைத்து அசுத்தங்கள் வெளியாகும் வரை வயிற்றை நன்றாக அழுத்த வேண்டும் இந்த நேரத்தில் தண்ணீரை அதிகமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் .

மைய்யித்தை குளிப்ப பாட்டுபவர் தனது கையில் துணி அல்லது கையுறையை சுற்றிக் கொண்டு மைய்யித்தின் மர்ம உறுப்புக்களை சுத்தம் செய்யவேண்டும டும். அந்த மைய்யத்து ஏழு வயதுக்கு மேற்ப்பட்டவராக இருந்தால் மர்ம உறுப்புகளை பார்க்காமலேயே கழுகவேண்டும்.பின்பு (பிஸ்மில்லாஹ்) என்று கூறி தொழுகைக்கு ஒழு செய்வதுபோல ஒழு செய்து விட வேண்டும். ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் தனது மகள் ஜைனப்(ரலி ரலி)அவர்கள் )இறந்தபோது அவர்களை குளிப் பாட்டிய பெண்களிடம் அவரின் வலதுபுறத்தையும் ஒழு செய்யும்உறுப்புகளையும் முதலில் கழுகுங்கள் என்று கூறினார்கள்(புஹாரி, முஸ்லிம்)

மைய்யித்தின் வாயிலோ மூக்கிலோ தண் ணீரை செலுத்தக்கூடாது அதற்க்கு பதிலாக ஈரத்துணியை விரலில் சுற்றிக்கொண்டு மைய்யித்தின் இரு உதடுகளையும் லேசாக பிளந்து பற்களையும் மூக்குத் துவாரங்களையும் மெதுவாக தேய்த்து சுத்தம் செய்யவேண்டும். அதன் பிறகு இலந்த இலை அல்லது வாசனைப் பொருள் கலந்த தண்ணீரால் முகத்தையும் தாடியையும்கழுகவேண்டும் பிறகு எஞ்சிய தண்ணீரை வைத்து உடல் முழுதும் குளிப்பாட்ட வேண்டும்.

மைய்யித்தை குளிப்பாட்டும்போது வலது பக்கமாக ஆரம்பிக்கவேண்டும் என்று ஹதீஸ்வந்திருப்ப பதால் கை, கால்களை வலது பக்கமாக கழுவ தால் ஆரம்பிக்கவேண்டும். இன்னும னும் ஒவ்வொரு; உறுப்பையும் மூன்று முறை கழுவ வேண்டும். ஒவ்வொரு தடவையும் வயிற்றை அழுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மூன்று தடவைக்குமேலும் அசுத்தங்கள் வெளியாகிகொண்டிருந்தால்தேவைக்கேற்ப ஒற்றைப் படையாக கழுவிக் கொள்ளலாம் என ஹதீஸில் வந்திருக்கிறது.

கடைசியாக கழுகும்போது துர் வாடைகளை நீக்கிவிடுவதற்காக கற்பூரத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பலமுறை கழுகியும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் அந்த பகுதியில்பஞ்சை வைத்து அடைத்து விட்டு அசுத்தம் வெளியான அந்த இடத்தை மட்டும் கழுகிவிட்டு மறுபடியும் ஒழு மட்டும் செய்து விட்டால் போதுமானது குளிப்பாட்ட வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் கஃபன் அணிவித்த பிறகும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் மறுபடியும் கழுவி கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மைய்யித்தை குளிர்ந்த நீரால் மட்டுமே குளிப்பாட்டவேண்டும். அசுத்தங்கள் அதிகம் இருந்து சுடு தண்ணீரால்தான் போக்கமுடியும் என்றிருந்தால்மட்டுமே சுடு தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். அதுபோலவே அசுத்தங்களை நீக்க வாசனை சோப்புக்களை உபயோகிக்கலாம் . ஆனால் தோல் கிழியும் அளவுக்கு அழுத்தி தேய்க்க கூடாது . பல்லுக்கு மிஸ்வாக்கை பயன்படுத்துவது சிறப்பாகும்.

மைய்யத்திற்கு மீசை, நகங்கள் சராசரிக்கு மேல் வளர்ந்திருந்தால் வெட்டலாம், (அக்குல்மர்மப்பகுதியின் முடிகளை வெட்டக்கூடாது

பெண் மைய்யித்தின் கூந்தலை மூன்று பின்னல்களாக பின்னி முதுகு பக்கம் தொங்க விடவேண்டும். குளிப்பாட்டியபின் மைய்யித்தின் மேல் உள்ள ஈரத்தை துணியால் ஒத்தி எடுக்கவேண்டும்

இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் தண்ணீராலும் இலந்த இலைப்பொடியினாலும் மட்டுமே குளிப்பாட்டவேண்டும், வாசனைத்திரவியங்களைப் பயன்படுத்தக்கூடாது,ஆணாக இருந்தால் தலையை மூடக்கூடாது. ஹஜ்ஜில் இஹ்ராம் கட்டிய நபித்தோழர் ஒருவர்இறந்தபோது வாசனைத் திரவியங்களை பயன்படுத்தாமலும் தலையை மூடாமலும் கஃபனிடுங்கள்ஏனெனில் மறுமை நாளில் அவர் அதேகோலத்தில் தல்பியாக் கூறியவராக எழுப்பப்படுவார் என்றுநபி(ஸல்) அவர்கள் கூ றினார்கள் (புஹாரி, முஸ்லிம்)

போரில் வீர மரணம் அடைந்த ஷஹீதின் ஆயுதங்கள் மற்ற போர் சம்மந்தப்பட்ட போருட்க்களை எடுத்துவிட்டு குளிப்பாட்டாமல், தொழகை நடத்தாமல் அவர் உடுத்தியிருந்தஆடையுடன் அடக்கம் செய்யவேண்டும். உஹது போரில் இறந்த சஹாபாக்களுக்கு நபி (ஸல்)அவர்கள் தொழ வைக்க வில்லை (புஹாரி,முஸ்லிம்)

தாய் வயிற்றில் உள்ள குழந்தை நான்கு மாதம் முடிந்து விழுந்துவிடுமானால் அந்தகுழந்தைக்கு பெயர் வைத்து குளிப்பாட்டி தொழுகை வைத்து அடக்கம் செய்யவேண்டும்,ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு தாயின் வயிற்றில் மூன்றாவது நாற்பதில்பிண்டமாக இருக்கு கும் அக் குழந்தைக்கு வானவர் உயிர் ஊதுவார் என்று கூறினார்கள். (முஸ்லிம்) நான்கு மாதத்திற்க்கு முன் பாக விழுந்துவிட்டால் அது உயிரற்ற வெறும் பிண்டம் என்பதால்குளிப்பாட்டவோ தொழுகை நடத்தவோ அவசியமில்லை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அடக்கம்செய்யலாம்.

தண்ணீர் கிடைக்காவிட்டாலோ அல்லது உடல் கருகி இருந்தாலோ அல்லது உடல் வெடித்துலோ சிதறி கிடந்து குளிப்பாட்ட முடியாத நிலையில் இருந்தால் ஒருவர் தன் கைய்யால் மண்ணில்அடித்து மைய்யித்தின் முகத்தையும் கையையும் தயம்மம் முறையில் தடவவேண்டும்.

மைய்யித்தின் உடலில் காணப்படும் ஏதாவது விசயம் நல்லதாக இல்லாவிட்டால்குளிப்பாட்டியவர் அல்லாஹ்வுக்கு பயந்து அதை வெளியில் யாரிடமும் சொல்லகூடாது, இஸ்லாமியசகோதரர் ஒருவரை குளிப்பாட்டி அவரில் காணப்படும் குறைகளை குளிப்பாட்டியவர் மறைத்துவிட்டால் அல்லாஹ் அவரை நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.(ஹாக்கிம்)

கஃபனிடுதல்

கஃபன் என்பது மரணித்தவரை குளிப்பாட்டி மூடி மறைப்பதற்கான ஆடைக்கு சொல்லப்படும்.மைய்யித்தை கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயக் கடமையாகும். கஃபனாடை மைய்யித்தின்சொந்த செலவில் இருக்கவேண்டும். இஹ்ராம் கட்டிய நிலையில் இறந்தவரை அவர் அணிந்திருந்த இரண்டு ஆடைகளிலேயே கபனிடுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.: இறந்தவர் கடனாளியாக இருந்தால் அல்லது தனது சொத்தை இன்னின்வர்களுக்குகொடுக்க வேண்டும் என்று மரண சாசானம் செய்திருந்தால் கடனையும் வஸியத்தையும் நிறைவேற்றிவிட்டு மைய்யித்தை அடக்கம் செய்வதற்க்கு தேவையான செலவு தொகையையும் எடுத்துகொண்டவயான பின்னரே வாரிசுதாரர்கள் அம்மய்யித்தின் சொத்தைப் பங்கிட வேண்டும். கஃபனிட்டுவதற்கானபொருளாதாரம் இல்லாத நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை அவரின் உறவினர்கள் கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயமாகும். உறவினர்கள் இல்லாதபோது அல்லது இருப்பவர்கள்வசதியற்றவர்களாக இருந்தால் (பைதுல்மால்) பொது நிதியகத்திலிருந்து அதற்கான பொறுப்பைஏற்று நிறைவேற்ற வேண்டும். அப்படி ஒரு நிதியகம் இல்லையானால் அந்த ஊரிலுள்ளோர்அதற்கான ஏற்பாட்டினை செய்வது கட்டாயமாகும்.

கஃபனிடுவதற்கு உடல் முழுக்க மறைக்கும் ஒரே ஒரு ஆடை இருந்தால் போதுமானது.எனினும் ஆண்களுக்கு வெள்ளை நிறத்தில் மூன்று ஆடைகளைக்கொண்டு கபனிடுவது விரும்பத்தக்கதாகும்

நபி(ஸல்)அவர்கள் மூன்று வெள்ளை ஆடைகளில் கஃபனிடப்பட்டார்கள்.(புஹாரி , முஸ்லிம்) அந்த ஆடைகளை கற்பு , பூரம் அல்லது சாம்பிரானி புகையால் வாசனைப்படுத்திக் கொள்ளவேண்டும்.பிறகு அந்த ஆடைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக விரித்து சந்தனம் மற்றும் வாசனைத்திரவியங் களை அந்த ஆடையில் தெளித்து அதன் பின்பு மைய்யித்தை அந்த ஆடையின் மேல்நிமிர்த்திக் கிடத்தி வைக்கவேண்டும்;. அப்போது நறுமணத்தால் ஈரப்படுத்தப்பட்ட பஞ்சை மைய்யித்தின் மல வாயிலில் வைக்கவேண்டும். அதன் மூலம் கெட்ட வாடைகள் வராமல்தடுக்கலாம். அதன் பிறகு அந்த பஞ்சையும் இறந்தவரின் மர்ம உறுப்புகளையும் சேர்த்து கட்டுவதுவிரும்பதக்கதாகும்.

முகதுவாரப்பகுதிகளான கண்.மூக்கு.உதடு.காது. ஆகியவற்றின் மீதும் சஜ்தாவில் படும்ப்உறுப்புக்கள் மீதும் சந்தனம் அல்லது கற்பூ ரம் போன்ற நறுமணப்பொருள்களை வைத்தும் கஃபனிடுவது சிறந்ததாகும். உடல் முழுவதும் வாசனை பூசினாலும் தவறு இல்லை நபித் தோழர்கள் இப்படியும் செய்திருக்கிறார்கள்.

வலது பக்கமாக உள்ள முதல் துணியை எடுத்து மடக்கிய பிறகு இடது பக்கமாக உள்ளதுணியை மடக்கி போர்த்த தவேண்டும். அதன் பிறகு அதுவரை அவர் மறுமப்பகுதியை மறைத்திருந்தமப்துணியை நீக்கி வி விடவேண்டும். பிறகு இரண்டாம், மூன்றாம் துணிகளை மடக்கிப் போர்த்த வேண்வேண்டும், பிறகு கஃபன் அவிழ் ந் துவிடாமல் இருப்பதற்காக கஃபனை அழுத்தமாக முடிச்சு போடவேண்டும். தலை முதல் கால் வரைக்கும் 5 அல்லது 3 முடிச்சிடுவது சிறப் பாகும். கப்ரில் வைத்தஉடன் முடிச்சுகளை அவிழ்த்து விடவேண்டும்.

பெண்களுக்கு ஐந்து ஆடைகள் கொண்டு கஃபனிடவேண்டும்ளை
1. கீழாடை
2. முகத்தை மூடுவதற்கு முந்தானை
3. மார்பு பகுதிக்கு சட்டை போன்ற ஒரு ஆடை
4–5. உடல் முழுதும் மறைக்கும் இரண்டு ஆடைகள்.
மற்ற முறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும்ஒரேமாதிரிதான் .

ஜனாஸா தொழுகை
ஜனாஸா தொழுகை என்பது ஃபர்லு கிபாயா ஆகும். மைய்யித் ஆணாக இருந்தால் அதன் தலைக்கு நேராகவும் பெண்ணாக இருந்தால் நடுவிலும் நின்று இமாம் தொழ வைக்கவேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் இப்படிதான் செய்தார்கள் என்ற செய்தி அபூ தாவூத் ஹதீஸ் கிதாபில்காணமுடிகிறது. இமாம் மஃமூம்களை விட சற்று முந்தி நிற்க வேண்டும். இடமில்லாமலிருந்தால்மஃமூம்கள் இமா முக்கு இடப்புறத்திலும் வலப்புறத்திலும் நின்றுகொள்ளலாம்.: ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் சொல்லவேண்டும். தக்பீர்களுக்கிடையே கையைஉயர்த்த வேண்டியதில்லை.

முதல் தக்பீருக்கு பின் சூரதுல் ஃபாத்திஹா (அல்ஹம்து சூரா)ஓதிக்கொள்ளவேண்டும் .

இரண்டாம் தக்பீருக்கு பின் அத்தஹியய்யாத்தில் ஓதப்படும் ஸலவாத்தை ஓதவேண்டும்; (அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா ஸல்லைத்த அலாஇப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத் . அல்லாஹ_ம்ம பாரிக் அலாமுஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீமஇன்னக ஹமீதும் மஜீத்) என்று கூற வேண்டும். அல்லது (அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மத்என்று சொன்னால்கூட போதுமானதாகும்.

மூன்றாவது தக்பீருக்கு பின் ஹதீஸில் வரும் துஆக்களை ஓத வேண்டும் (அல்லாஹ_ம் மக்ஃபிர் லஹ_ வர்ஹம்ஹ_ வ ஆஃபிஹி வஃபு அன்ஹ_ வ நக்கிஹி மினல்கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத்தனஸ் வ அப்தில்ஹ_ தாரன் கைரம் மின் தாரிஹிவ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி வ ஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹ_ல்ஜன்னத வ அயித்ஹ_ மின் அதாப அதாபில் கப்ரி வமின் அதாபின்னார் )என்று ஓதிக்கொள்ளவேண்டும்இது முஸ்லிமில் இடம்பெரும் துஆவாகும்

நான்காம் தக்பீருக்குபின் சற்று அமைதியாக இருந்துவிட்டு வலது பக்கத்தில் மட்டும் ஸலாம்கொடுக்கவேண்டும். ( (ஹதீஸ் . ஹஹாக்கிம்)

ஜனாஸா தொழுகைக்கு தாமதமாக வருபவர். இமாம் ஸலாம் கொடுத்த பின் தவறிவிட்டதைபூர்த்தி செய்யவேண்டும்ஜனாஸா தொழுகையை தவறிவிட்டவர் அடக்கப்பட்டிருக்கும் கப்ரில் நின்றுகூட தெழலாம்.தொழும்போது கிப்லாவிற்கும் இவருக்கும் இடையில் கப்ர் இருக்கவேண்டும் இப்படி நபி (ஸல்)அவர்கள் தொழுது இருக்கிறார்கள்(புஹாரி முஸ்லிம்)நான்கு மாதம் பூ ர்த்தியான பிறகு வயிற்றில் உள்ள குழந்தை வெளியாகி வெளியாகிவிட்டால் அதற்காக தொழுகை நடத்தவேண்டும். குறை மாதத்தில் வெளியாகி வெளியாகிவிட்ட குழந்தைக்கு தொழுகை நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை அதன் பெற்றோருக்கு பாவ மன்னிப்பு இறை கிருபைகிடைக்க துஆ செய்யவேண்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் ( ஆதாரம் அபூ தாவூத்)

ஒரு இஸ்லாமிய சகோதரர் இறந்து. அவருக்கு ஜனாஸா தொழுகை . வைக்கப்படாமல் அடக்கம்செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நிறைவேற்றுவது விரும்பத் தக்க கதாகும். தாகும்.வழிப்ப பறி கொள்ளையர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவருக்கு இஸ்லாமிய பொது மக்கள் தொழுகை நடத்தலாம், ஆனால் ; ஊர் முக்கியஸ்த்தர்களும் அறிஞர்களும் அந்த ஜனாஸாதொழுகையில் கலந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்ததாகும் இதன் மூலம் தற்கொலை எண்ணத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். ஜனாஸா தொழுகையை பள்ளிக்கு குள்ளேயே வைத்து நடத்துவது கூடும். இப்படி நபி(ஸல்) அவர்கள் செய்து இருக்கிறார்கள் (முஸ்லிம்)

ஜனாஸா தொழுகைக்கு பிரத்தியேகமாக பள்ளிக்குவெளியே அடக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ஓர் இடம் அமைத்துக்கொள்வது நபி வழியாகும்.

ஜனாஸாவை சுமப்பதும் அடக்கம் செய்வதும்
ஜனாஸாவை தோள் மீது சுமந்து செல்வது சுன்னத்தாகும். ஜனாஸாவை தாமதப்படுத்தாமல் விரைவாக கொண்டு செல்லுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்.ஜனாஸாக்கு முன்பாக, பின்பாக, வலது, இடது பக்கமாக எப்படி வேண்டுமானாலும்செல்லலாம் இப்படி செல்ல ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது (அஹ்காமுல் ஜனாயிஸ் அல்பானீ)ஜனாஸாவை பின்பற்றிச்செல்லும் யாரும் அந்த ஜனாஸாவை பூமியில் வைப்பதற்க்கு முன்பாக அமர்வது கூடாது அப்படி அமர்வதை நபி(ஸல்)அவர்கள் தடுத்து இருக்கின்றார்கள்.தொழக்கூடாத நேரங்களில் அடக்கமும் செய்யக்கூடாது. இது சம்மந்தமாக உக்பா பின் ஆமிர்(ரழி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது

மூன்று நேரங்களில்தொழக்கூ டாது என்றும் . எங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூடாது என்றும் நபி(ஸல்)அவர்கள் தடை செய்தார்கள் . அந்நேரங்கள் !
1. சூரியன் உதிக்கும் போது.
2. சூரியன் மத்தியில் இருக்கும் போது.
3. சூரியன் மறையும் போது.
என்று அறிவிக்கப்பட்ட ஹதீஸ் . (முஸ்லிமில் லிமில்) பதிவாகி உள்ளது தடை செய்யப்பட பட்ட இந்த மூன்று நேரங்கள் தவிர மற்றபடி இரவு பகல் எந்த நேரமும் மைய்யத்தை அடக்கம் செய்யலாம்.

பெண்ணை கப்ரில் வைக்கும்போது பெண்ணின் எந்த உறுப்பு பும் வெளியில் தெரியாதவாறும் கப்ரின் மேல் பாகத்தை துணியால் மறைப்பது சுன்னத்தாகும். மைய்யித்தை கப்ரில் இறக்கும்போது;கால் பகுதி வைக்க கப்படும் பக்கமாகவே இறக்கி மெதுவாக வைக்கவேண்டும் .கப்ரை தோண்டிவிட்டு அந்த கப்ருக்குள்ளேயே கிப்லா திசையில் ஒரு குழி தோண்டி அதில்தான்மைய்யித்தை வைக்கவேண்டும். இதற்க்குதான் (லஹ்த்) என்று சொல்லப்படும். சில இடங்களில்குழியின் மையப்பகுதியில் தோண்டி மையத்தை அடக்கம் செய்வா வார்கள் இதற்கு ( ர்(ஷக்கு) என்றுசொல்லப்படும் இப்படிச் செய்யக்கூடாது. இது பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறும்போது நமக்கு லஹ்த் ” ம் மற்றவர்களுக்கு ‘ ஷக்கு கு’ ம் என்று கூறினார்கள் (அபூத தாவூத்) குறிப்பு ! இது பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டால் எளிதில் புரியும்.துர் நாற்றம் வெளியில் வர வராமலும் . கிழித்து தின்னும் மிருகங்கள் தோண்டி எடுக்காமல்இருப்பதற்காகவும் கப்ரை ஆழமாக தோண்டி பாதுகாப்பாக அடக்கம் செய்வது சுன்னத்தாகும்.மைய்யித்தை குழியிலே வாங்கி வைப்பது அந்த மைய்யித்தால் வஸிய்யத் செய்யப்பட்டவரோஅல்லது சொந்தக்காரர்களோ அல்லது யாரேனும் ஒரு முஸ்லிம லிம் அந்த பொறுப்பை ஏற்கவேண்டும்.

மைய்யித்தை கப்ரில் வாங்கி வைப்பவர்( பிஸ்மில்லாஹி வஅலா சுன்னத்தி ரசூலில்லாஹி )என்று சொல்லிக்கொள்ளவேண்டும் இப்படிதான் நபி(ஸல்)அவர்கள் செய்தார்கள் (அபூ தாவூத்)மைய்யித்தின் வலது பாகத்தை சிறிது சரித்து கிப்லாவை நோக்கி கப்ரில் வைக்க வேண்டும் நீங்கள் இறந்தாலும் உயிருடன் இருந்தாலும் உங்கள் கிப்லா கஃபாதான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(பைஹகீ)

(மைய்யித்தின் தலைக்கு தலையனைப்போல் கல் மண் போன்ற எதையும் வைப்பது கூடாது.இஹ்ராம் அநிந்து இறந்தவரைத் தவிர மற்ற யாரையும் முகத்தைத் திறந்த நிலையில் அடக்கக்கூடாது. அடக்கிய பிறகு வந்திருக்கும் ஒவ்வொரும் குழியில் மூன்று முறை மண்ணள்ளிப் போட வேண்டும் இப்படி நபி(ஸல்)அவர்கள் செய்துள்ளார்கள் (இப்னு மாஜா) பிறகு கப்ரை மூட வேண்டும் அடக்கம் செய்யப்பட்ட கப்ருக்கும் சாதாரண இடத்திற்கும் வித்தியாசம் தெரிவத தெரிவதற்காக கப்ரை ஒரு ஜான் அளவுக்கு மண்ணை உயர்த்துவது கூடும். இப்படிதான் நபி(ஸல்)அவர்களின் கப்ருன் இருந்தததாக புஹாரியில் ஒரு ஹதீஸ் இருக்கிறது. மேலும் இது கப்ருதான் என்று தெரிந்து கொள்வதற் காக தலைமாட்டில் ஒரு கல்லை வைப்பது சுன்னத்தாகும். உஸ்மான் பின் மழ்வூன்(ரழி) அவர்களின் கப்ரில் இப்படி செய்யப்பட்டது (அபூதாவூத்)

கப்ரின் மீது சுண்ணாம்பு, சந்தணம் பூசுவது, அதனை உயர்த்துவது, கட்டடம் கட்டுவது,பிறந்த, இறந்த தேதி அல்லது வேறு ஏதேனும் செய்தி எழுதுவது, அதன் மீது அமர்வது,மிதிப்பது, சாய்வது போன்ற அனைத்தையும் நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள் (அபூ தாவூத்)

ஒரு கப்ரில் ஒரு மைய்யத்திற்க்கு மேல் வைக்கக்கூடாது ஒவ்வொருவரையும் தனித்தனியாகஅடக்கம் செய்யவேண்டும். ஒரே நேரத்தில் அதிகமானோர் இறந்து தனித்தனி கப்ரு தோண்டிஅடக்கம் செய்ய முடியாத சூழ்நிலையில் நீளமாக ஓடை போன்று குழியைத் தோண்டி மைய்யித்தைஅடக்கம் செய்யலாம். அப்போதுகூட ஒரு மைய்யத்திற்கும் மற்றொரு மைய்யத்திற்கும் இடையில்சிறிதளவு தடுப்பை ஏற்படுத்தவேண்டும். இப்படிதான் உஹது போரில் ஷஹீதான வீர சஹாபாக்ஹகளை நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்ய உத்தவிட்டார்கள்: இறந்தவரின் வீட்டாருக்கு மற்ற உறவினர்கள் அல்லது சகோதரரர்கள் சாப்பாடு சமைத்துக்கொடுப்பது மார்க்கம் வலியுறுத்திய சுன்னத்தாகும். இறந்தவர் வீட்டில் சமைக்க சொல்லி சாப்பிடக்கூடாது.
ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி)அவர்கள் மரணித்தபோது ஜஃபருடைய குடும்பத்தாருக்குஉணவு தயார்செய்து கொடுங்கள் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்(முஸ்லிம்).எனவே நபிவழியைப் பின்பற்றி மரணம் சம்பவித்த வீட்டாருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர. அந்த வீட்டில் இறைச்சியும் சோறும் சமைப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இறந்தவர் வீட்டில் சாப்பாடு தயாரிக்கச் சொல்லி அங்கு சென்றவர்களெல்லாம்சாப்பிடுவதையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அடிக்கடி அந்த வீட்டில்கூட்டம் கூடுவதையும் நாங்கள் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட ஒப்பாரி யின் வகைகளில் ஒருவகையாகவே கருதினோம் என்று நபித்தோழர்கள் கூறுகின்றார்கள் (அபூதாவூத்)
ஆண்கள் மட்டுமே கப்ருகளை தரிசிப்பது (ஜியாரத் செய்வது)சுன்னத்தாகும். இதன்மூலம் இறந்தவர்களுக்காக துஆ செய்ய முடியும் அதோடு மரணம் பற்றிய சிந்தனை மனதில் ஏற்ப்பட்டு பாவம் செய்யாமல் இருப்பதற்க்கும் மறுமையை நினைவுபடுத்த இது வழிவகுக்கும்.கப்ரு களை தரிசிக்ககூடாது என்று உங்களை நான் தடுத்திருந்தேன் இப்போது நீங்கள்ஜியாரத் செய்யலாம் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் (முஸ்லிம்)

பெண்கள் கப்ருகளை தரிசிக்கச் செல்லவே கூடாது அப்படிச் செல்வது பாவமாகும்” கப்ருகளை தரிசிக்கும் பெண்களை நபி(ஸல்)அவர்கள் சபித்துள்ளார்கள் “”(திர்மிதி, அபூதாவூத், (நஸஈ இப்னு னுமாஜா, அஹ்மத்) பெண்கள் இயற்க்கையிலேயே பலகீனமானவர்கள் இதுபோன்ற ப லகீனமானவர் இழப்புகளை தாங் கிக் கொள்ளாமல் கன்னத்தில் அடித்து கொள்வது ஒப்பாரிவைப்பது சட்டைகளைக் கிழித்துக்கொள்வது போன்றவற்றை செய்துவிடுவார்கள். எல்லா வற்றுக்கும் மேலாக மறுமையைப்பற்றி நினைக்கும் அந்த இடங்களில் பெண்கள் வருவதால் வேறு சில குழப்பங்களநிகழ சாத்தியங்கள் இருக்கிறது என்பதால் ஹராமாக்கப்பட்டிருக்கலாம். (இன்று தர்ஹாக்களில் கண்கூடாக பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றுதான்)அடுத்து கப்ரை தரிசிப்பவர் அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன் ன்ஷா அல் லாஹ_ பிகும்லாஹிகூன் . என்று செல செல்லவேண்டும் நபி(ஸல்)அவர்கள் இப்படி செல்லும்படி கூறினார்கள்;(முஸ்லிம்) இது அல்லாமல் கப்ருக்குச் சென்று துஆ கேட்பதும் அதைக் கண்ணியப்படுத்தும்எண்ணத்தில் பணிந்து குனிவதும் அதைத் தடவி முத்தமிடுவதும் இணைவைத்தலாகும். ஷிர்க்என்ற எண்ணம் இல்லாமல்தான் இதையெல்லாம் செய்கிறோம் என்று சொல்லி யாரும் வாதிட முடியாது எல்லோரின் உள்ளத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவன் எந்த ஒரு முஸ்லிமும் பித்அத்திற்குஆளாகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்

ஆறுதல் கூறுதல்

இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது கண்டிப்பாக மார்க்கம் வழியுறுத்திய சுன்னத்தாகும்அதுவும் ஹதீஸில் வரக்கூடிய வார்தை தைகளைக்கொண்டே ஆறுதல் சொல்வது சிறப்பாகும்.(இன்ன லில்லாஹி மா அகத வலஹ_ மா அஃதா வகுல்லு ஷையின் இன்தஹ_ பிஅஜலின்முஸம்மா ஃபஸ்பிர் வஹ்த்தஸிப்) பொருள்:- நிச்சயமாக இறைவன் எதனை எடுத்துக் கொண்டானோஅது அவனு அவனுக் க் குரியதே யதே இன்னும் எதனை கொடுத்துள்ளானோ அதுவும் அவனு அவனுக்குரியதே அவனிடத் தில் எல்லாவற்றுக்கும் ஒரு தவணையுண்டு (அந்த தவணை முடியும்போது அவன் அதைஎடுத்துக் கொள்வான் அதுதான் நியதி எனவே) நன்மையை நாடி பொறுத்து கொள்ளுங்கள் என்றுஆறுதல் சொல்வதுதான் நபிவழி (புஹாரி, முஸ்லிம்) இன்னும் ( பிவழி அஃழமல்லாஹ_ அஜ்ரக ரக்) இந்த;) சோதனைக்காக அல்லாஹ் உங்களின் மறுவுலக கூலியை மகத்தானதாக்கட்டும் என்றும் இன்னும் (அஹ்ஸ னல்லாஹ_ அஜ்ரக்)உங்களின் கூலியை அல்லாஹ் அழகானதாக மாற்றிவிடட்டும்என்றும் ஆறுதல் சொல்லலாம்.

ஒப்பாரி வைக்காமல் வார்த்தை வெளிப் படாமல் அழலாம். நபி(ஸல்)அவர்களின் மகன்இப்றாஹீம் இறந்தபோது கவலையுடன் நபி(ஸல்)அவர்கள் அழுதார்கள் ஆனால் ஒப்பாரி வைக்கவில்லை (புஹாரி, முஸ்லிம்)ஒப்பாரி வைப்பது இஸ்லாத்தில் ஹராமாகும். ஒப்பாரி என்பது ஒரு மய்யித்தை வீட்டில்வைத்துக் கொண்டு அல்லது அடக்கியதற்குப் பிறகு இறந் தவர் செய்ததையும் பேசியதையும்சாதித்ததையும் சொல்லிச் சொல்லி அழுவதற்கு சொல்லப்படும். இப்படிச் செய்வது இஸ்லாத்தில்தடுக்கப்பட்டதாகும். துக்கம் தாங்கமுடியாதவன் என்று காட்டிக்கொள்வதற்காக ஆடைகளைக்கிழித்துக்கொள்வது கன்னத்தில் அடித்துக்கொள்வது நெஞ்சில் அடித்துக்கொள்வது மொட்டைபோட்டுக்கொள்வது இவையனைத்தும் மார்க்கத்திற்கு எதிரான அறியாமைக் காலத்து பழக்கமாகும்நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணத்தில் அடித்துக் கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக் காலத்து மக்கள் கூறிய வார்த்தைகளைப்போல் சில வார்த்தைகளைக்கூறி ஒப்பாரி வைப்பவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்)

இறந்தவரின் குடும்பத்தினர் குளிக்காமல், நல்ல ஆடைகள் அணியாமல், வியாபாரம் செய்யாமல் மனைவி மக்களுடன் சந்தோசமாக இல்லாமல் துக்கம் அனுசரித்துக் கொண்டிருப்பதை இஸ்லாம் கண்டிக்கின்றது. இறந்தவரின் மனைவியைத் தவிர வேறு எவரும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் அனுசரிக்கக்கூடாது என நபி(ஸ ல்)அவர்கள் கூறியுள்ளார்கள். இறந்தவரின் மனைவிமட்டும் நாலு மாதம் பத்து நட்கள் துக்கம் அனுசரித்தாக வேண்டும். அதே சமயம் அவர் இறக்கும்போது அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பெற்றெடுக்கும் வரைதான் துக்கம்அனுசரிக்கவேண்டும். இதற்குத்தான் ” இத்தா “” என்று இஸ்லாம் கூறுகிறது.ஆனால் தற்போது நம் சமுதாயத்தில் சில ஊர்களில் 40 நாட்கள் தனிமையில் இருந்துவிட்டால்இத்தா முடிந்துவிட்டது என்று கருதுகிறார்கள். இது இஸ்லாம் காட்டிய வழிமுறை அல்ல.

: இன்னும் இதுபோன்ற பித்அத் துகளில் ஒன்றுதான் ஜனாஸாவைத் து}க்குவதற்க்கு பயன்படுத்தும்(சந்து}க்)ஜனாஸாப் பெட்டியின் மீது பச்சை சைத் துணி விரிப்பது, து}க்கித் செல்கிறபோது ஷஹாதா கலிமாவை சப்தமிட்டுக் கொண்டு செல்வது, ஜனாஸா தொழுகைஹமுடிந்தவுடன் இமாம் துஆச் செய்ய மற்றவர்கள் ஆமின் கூறுவது அடக்கி முடிந்த பின்னர் கப்ரின்தலைமாட்டில் இருந்து கொண்டு தல்கீன் என்ற பெயரில் பலருக்கும் புரியாத மட்டு மின்றி அதைஓதுபவர்களில் கூட பலருக்கு அது என்ன என்று தெரியாத சில அரபி வார்த்தைகள் கூறுவது போன்ற ஏராளமான பித் அத்கள் நடைபெறுகின்றன. இறந்தவர் வீட்டில் நட நடக்கும் அனாச்க்சாரங்களை ஒரு புத்தகமாகூட வெளியிடலாம் டலாம்: எனவே ஒவ் வொரு குடும்பத்தாரும் இந்த விசயங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதுஅவசியமாகும். ஒருவர் இறந்துவிட்டால் மோதினார் தான் வரவேண்டும் என்றில்லாமல் அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.ஆகவே மேற்கூறப்பட்ட இந்த விசயங்களை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்னும் படித்துதெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் படிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்திக் கொடுத்து இம்மையிலும்மறுமையிலும் வெற்றி பெறுவோமாக ஆமீன் வஸ்ஸலாம்.
தொகுத்தவர் : ஆ.யு

 லியாக்கத் அலி (மிஸ்பாஹ) (Y. B. A. KANOO. DAMMAM) இதில் இருக்கும் தவறுகளை இந்த முகவரியில் தெரிவிக்கவும்(sfirthouse@yahoo.co.in). தவறுகள் இல்லாத பட்சத்தில் உங்களால் முடிந்த வரை இந்த செய்தியை இந்த சமுதாயத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம் நன்மையை ஏவி தீமையை தடுப்பது நம் எல்லோரும் செய்ய வேண்டியது ஆகும்.

Posted in தினம் ஒரு தகவல் | Leave a comment

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு

திருக்குர்ஆனில் மிக முக்கிய அத்தியாயம் சூரத்துல் ஃபாத்திஹாஎனப்படும் அல்ஹம்து   அத்தியாயமாகும்.
ஏராளமான சிறப்புகளைக் கொண்ட அந்த அத்தியாயத்தை அறியாத – மனனம் செய்யாத முஸ்லிம்கள் யாரும் உலகில் இருக்க முடியாது.
ஆனாலும் அதன் மகத்துவத்தை அவர்கள் அறிவதில்லை.
இதன் சிறப்பு குறித்து வந்துள்ள நபிமொழிகளை தமிழறியும் முஸ்லிம்கள் அறிந்துக்கொள்ள வேண்டும், பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக தொகுத்து வழங்குகிறோம்.
தேள் கடிக்கு மருந்து!

நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்நிலையில் அந்தக் கூட்டத்தின் தலைவனை (தேள்) கொட்டிவிட்டது. உங்களிடம் மருந்தோ அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா?” என்று அவர்கள் கேட்டனர்.
அதற்கு நபித்தோழர்கள், ”நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்என்று கூறினார்கள். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள்.
அதன் பின்னர் ஒருவர், ‘அல்ஹம்துசூராவை ஓதி உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம்என்று கூறி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டார்கள். இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத் தக்கது என்று உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டு விட்டு எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 2276
இதே ஹதீஸ் புகாரி (5007. 5736. 5749) ஆகிய எண்களிலும், முஸ்லிம் (4428, 4429), திர்மிதி (1989), அபூதாவூத் (3401, 2965), இப்னுமாஜா (2147), அஹ்மத் (11046, 10972, 10648, 10562) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
திர்மிதியின் மற்றொரு (1989) அறிவிப்பில் முப்பது ஆடுகள் கொடுத்தார்கள் என்றும் பாத்திஹாவை ஏழு தடவை ஓதினார் என்றும் இடம் பெற்றுள்ளது.
அஹ்மத் (10972) என்ற நூலில், தேள் கொட்டிய இடத்தில் ஓதி துப்பினார் என்று இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸிலிருந்து தேள் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டினால் பாத்திஹாவை வைத்து ஓதிப் பார்க்கலாம் என்று நமக்கு தெரிகிறது. என்றாலும் நிவாரணம் கிடைப்பது அவர்களின் இறையச்சத்தைப் பொறுத்தது. மேலும் நபி (ஸல்) அவர்கள் நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள். எனவே மருத்துவம் செய்வதுடன் இறைவனிடமும் நோய் நிவாரணத்திற்கு துஆச் செய்ய வேண்டும்.

மகத்தான அத்தியாயம்!
நான் ஒரு முறை தொழுது கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களுடைய அழைப்புக்குப் பதில் கொடுக்கவில்லை. தொழுது முடித்த பின் அவர்களிடம் சென்றேன். நான் அழைத்தவுடன் வருவதற்கு என்ன தடை?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். அல்லாஹ்வின் தூதரே! தொழுது கொண்டிருந்தேன்என்று நான் கூறினேன்.
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு உயிர் அளிக்கக் கூடிய ஒரு காரியத்திற்காக இத்தூதர் அழைக்கும் போது இத்தூதருக்கும் அல்லாஹ்வுக்கும் பதிலளியுங்கள்‘ (அல் குர்ஆன் 8:24) என்று கூறவில்லையா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, ”இந்தப் பள்ளியிருந்து நீ புறப்படுவதற்கு முன் குர்ஆனில் உள்ள மகத்தான ஒரு அத்தியாயத்தை உனக்கு நான் கற்றுத் தருகிறேன்என்று கூறி எனது இரு கையையும் பிடித்துக் கொண்டனர்.
அவர்கள் பள்ளியிலிருந்து புறப்படுவதற்குத் தயாரான போது, ”அல்லாஹ்வின் தூதரே! குர்ஆனில் உள்ள மகத்தான ஓர் அத்தியாயத்தைக் கற்றுத் தருவதாகக் கூறினீர்களே!என்று நினைவு படுத்தினேன். அவர்கள் ஆம்அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்பது தான் அந்த அத்தியாயம் என்று கூறினார்கள்.நூல்: புகாரி 4474.
இதே ஹதீஸ் புகாரி (4647, 4703, 5006), நஸயீ (904), அபூதாவூத் (1246), இப்னு மாஜா (3775), அஹ்மத் (15171, 17117), தாரமி (1454, 3237), ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் திர்மிதீ (2800வது) அறிவிப்பில் தவ்ராத், இன்ஜீல் மற்றும் ஸபூர் ஆகிய வேதங்களில் இல்லாத மகத்தான சூராவை கற்றுத் தரட்டுமா?” என்று கேட்டதாக இடம் பெற்றுள்ளது.

குர்ஆனின் அன்னை!

திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (அல்ஃபாத்திஹா அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும், மகத்தான குர்ஆனும் ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4704
இறைவனிடம் உரையாடும் அத்தியாயம்!

தொழுகையில் ஓதுவதை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்என்று ஒருவன் கூறும் போது என்னை என் அடியான் புகழ்ந்து விட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். அவன் அர்ரஹ்ôனிர் ரஹீம்என்று கூறும் போது என் அடியான் என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில் பாராட்டி விட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். மாலிக்கி யவ்மித்தீன்என்று கூறும் போது என்னைக் கவுரவப்படுத்த வேண்டிய விதத்தில் கவுரவப்படுத்தி விட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தயீன்என்று கூறும் போது இதுதான் எனக்கும் எனது அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும்என்று அல்லாஹ் கூறுகிறான். இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்என்று கூறும் போது என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்: முஸ்லிம் 655

ஒளிச்சுடர்!

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அமர்திருந்த போது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கண்டார். அப்போது வானத்தை அன்னாந்து பார்த்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள், ”இதோ! வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறதுஎன்று கூறினார். அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி வந்தார். அப்போது ஜிப்ரயீல், ”இதோ! இப்போது தான் இந்த வானவர் பூமிக்கு வந்திருக்கிறார். இதற்கு முன் அவர் பூமிக்கு இறங்கியதில்லைஎன்று கூறினார். அவ்வானவர் ஸலாம் கூறிவிட்டு, ”உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப்பட்டிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். அல் ஃபாத்திஹா அத்தியாயமும் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை! அவற்றிலுள்ள எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லைஎன்று கூறினார்.நூல்: முஸ்லிம் 1472, நஸயீ 903.

பைத்தியத்திற்கும் மருந்து!

அலாகா பின் சுகார் (ரலி) அவர்கள் ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அம்மக்கள், ”நீர் இந்த மனித(தூத)ரிடமிருந்து நல்ல செய்தியைக் கொண்டு வந்திருக்கிறீர். எங்களுக்காக இந்த மனிதருக்கு ஓதிப் பார்ப்பீராக!என்று கூறி விட்டு, சங்கலியால் பிணைக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். காலையிலும் மாலையிலும் சூரத்துல் பாத்திஹாவின் மூலம் ஓதிப் பார்த்தர்கள். பின்பு அவர் முடிச்சியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவரைப் போன்று மகிழ்ச்சியில் திளைத்தார். இதற்காக அம்மக்கள் அவருக்கு (ஆடுகளை அன்பளிப்பு) வழங்கினார்கள். இதை அவர் நபி (ஸல்) அவர்களிடத்தில் சொன்ன போது, ”நீ அதில் சாப்பிடு! என்னுடைய வாழ்நாள் மீது சத்தியமாக! மக்களில் சிலர் தவறானதன் மூலம் மந்திரித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் நீர் உண்மையைக் கொண்டு சாப்பிடுகிறீர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத் 2966, அஹ்மத் 20833, 20834
மற வேதங்களில் இல்லாத அத்தியாயம்!
அல்ஃபாத்திஹா அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைப் போன்று வேறு எந்த வேதத்திலும் குறிப்பிடப்படவில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடத்தில் உபை (ரலி) அவர்கள் உம்முல் குர்ஆன் (ஃபாத்திஹா) அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். தவ்ராத், இன்ஜீல், ஸபூர், புர்கான் ஆகிய வேதங்களில் இது போன்று அருளப்படவில்லை. இதுதான் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களைக் கொண்டதும், மகத்துவம் மிக்க குர்ஆனும் ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்:அஹ்மத் 8328.
இதே ஹதீஸ் திர்மிதி (2800, 3049, 3050) நஸயீ (905), அபூதாவூத் (1245), தாரமி (3238) ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக வைத்திருக்கும் அஜரத்துமார்கள் இந்த ஆதாரங்களைத்தான் காட்டுகின்றனர்.எனவே ஓதிப்பார்ப்பது பற்றிய முழு விபரங்களையும் விரிவாக எழுதினால் பாமர மக்கள் தெளிவு பெறுவார்கள்.மந்திரித்தல் என்பது மார்க்கத்தின் அடிப்படையில் எவ்வகையில் கூடும் எவ்வகையில் கூடாது என்பதை தெளிலாக விளக்கவும்.உதாரணமாக தேள்கடி போன்ற வற்றுக்கு இவ்விதம் மந்திரித்தால் சரியாகுமா? இது போன்ற பிரச்சினைகளில் ‘நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள்’ என்னும் கருத்துப்பட வந்துள்ள நபி மொழிக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் சற்று குறைவது போல் தோன்றுகின்றதே இவை பற்றியெல்லாம் சற்று விரிவாக ஒரு கட்டுரை வெளியிட்டால் அனைவருக்கும் பயனாக இருக்கும்.

உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். ஓதிப் பார்த்தலை இஸ்லாம் முற்றிலும் தடுக்கவில்லை என்றாலும் இன்றைக்கு நடைமுறையில் உள்ள ஓதிபார்த்தல் என்ற ஏமாற்று வேலைக்கும் இஸ்லாம் சொல்லும் ஓதி பார்த்தலுக்கும் தொடர்பில்லை. இது குறித்து விரைவில் விளக்கமான கட்டுரை வரும் இன்ஷா அல்லாஹ்.
மருத்துவம் செய்யுங்கள் என்று வந்துள்ள நபிமொழிகள் ஓதிபார்த்தலுக்கு எதிரானதல்ல.
يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاء لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِين
 
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது ;) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.(10:57)
குர்ஆனில் நோய்க்கு மருத்துவம் இருக்கின்றது என்பதை இந்த வசனம் சுட்டிக் காட்டுகின்றது.
நன்றி:- அத்திகடையான்
بسم الله الرحمن الرحيم
In the name of Allah , the Entirely Merciful, the Especially Merciful.
அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
 
الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ
Praise be to Allah, Lord of the Worlds,
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
الرَّحمٰنِ الرَّحيمِ
The Beneficent, the Merciful:
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
مٰلِكِ يَومِ الدّينِ
Owner of the Day of Judgment,
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ
Thee (alone) we worship; Thee alone we ask for help.
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
 
اهدِنَا الصِّرٰطَ المُستَقيمَ
Show us the straight path,
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
صِرٰطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ المَغضوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ
The path of those whom Thou hast favored; Not (the path) of those who earn Thine anger nor of those who go astray.
(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
Posted in தினம் ஒரு தகவல் | Leave a comment

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in Uncategorized | 1 Comment